முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஷாருக்கான் படத்தில் வில்லனாக அபிஷேக் பச்சன்..!! - ரசிகர்கள் உற்சாகம்

Amitabh Bachchan has this to say about Abhishek Bachchan playing antagonist in Shah Rukh Khan’s KING
04:26 PM Jul 16, 2024 IST | Mari Thangam
Advertisement

நடிகர் ஷாருக்கானின் புதிய படத்தில் வில்லனாக அபிஷேக் பச்சன் நடிக்க உள்ளதாக அமிதாப் பச்சன் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisement

ஷாருக்கானின் கிங் திரைப்படத்தில் அபிஷேக் பச்சன் வில்லனாக நடிக்க உள்ளார், அதில் ஷாருக்கின் மகளும் நடிகையுமான சுஹானா கானும் நடிக்கிறார். இந்தப் படத்தினை பதான் இயக்குநர் சித்தார்த் ஆனந்த் தயாரிக்க உள்ளார்.  இதுகுறித்து தனது சமூக வலைதள பதிவில் அமித்தா பச்சன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரசிகர் ஒருவர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பதிவை அமிதாப் பச்சன் பகிர்ந்து, "ஆல் தி பெஸ்ட் அபிஷேக். இதுதான் சரியான நேரம்" எனக் கூறியுள்ளார். ரசிகர் பகிர்ந்த பதிவில், "அபிஷேக் சார் வில்லனாக நடிக்கும்போது அவரால் எவ்வளவு தரமான நடிப்பை தர முடியுமென அவரின் பிரீத் இன் டூ த ஷேடோவ், ராவணன், பிபி பார்த்தவர்களுக்கு தெரியும். எப்போதும் அவரை குறைவாக மதிப்பிடாதீர்கள்" எனக் கூறினார்.

2014இல் வெளியான ஹேப்பி நியூ இயர் படத்தில் ஏற்கனவே அபிஷேக் பச்சன், ஷாருக்கானுடன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஷாருக்கானின் நடிப்பில் கடைசியாக வெளியான பதான், ஜவான், டன்கி திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் அடுத்ததாக கிங் படம் வெளியாக உள்ளது.

Read more | செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 47-வது முறையாக நீட்டிப்பு..!! நீதிபதி அல்லி பரபரப்பு உத்தரவு..!!

Tags :
Abhishek BachchanAmitabh BachchanShah Rukh Khan
Advertisement
Next Article