For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"தல இருக்கும்போது வால் ஆடக்கூடாது".. ஜே.பி நட்டாவை தடுத்த அமித்ஷா.! பாஜக மாநாட்டில் சலசலப்பு.!

05:57 PM Feb 19, 2024 IST | 1newsnationuser4
 தல இருக்கும்போது வால் ஆடக்கூடாது    ஜே பி நட்டாவை தடுத்த அமித்ஷா   பாஜக மாநாட்டில் சலசலப்பு
Advertisement

தலைநகர் டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாக பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாராளுமன்ற தேர்தல் குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும் நிர்வாகிகளும் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி மற்றும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜநாத் சிங் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

Advertisement

இந்த நிகழ்ச்சியின் போது நடந்த சில சம்பவங்கள் மக்களிடம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த மாநாட்டின் முதல் நாள் நிகழ்வில் தேசிய தலைவர் ஜே.பி நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் இருவரும் ஒன்றாக மாநாட்டிற்கு வருகை புரிந்தனர். அப்போது தொண்டர்களை பார்த்து கையசைத்தவாறு மேடைக்கு வந்தார் அமித் ஷா. அவர் தன் கை அசைப்பதை நிறுத்தியதும் தொண்டர்களுக்கு கை அசைக்க முயன்றார் ஜே.பி நட்டா.

அவரை உடனடியாக தடுத்த அமித் ஷா இருக்கையில் அமரும்படி சைகை செய்தார். இது பாஜக தொண்டர்களிடையே சிறிது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கட்சிக்குள் சர்வதிகாரம் நடைபெறுகிறதா.? அல்லது பதவிப் போட்டி நடைபெறுகிறதா என பலரும் கேள்வி எழுப்பி இருக்கின்றனர் . இதேபோன்று பிரதமர் மோடிக்கு ஆள் உயர மாலை அணிவிக்கப்பட்டது . அப்போது அந்த மாலைக்குள் வருவதற்கு ராஜ்நாத் சிங் மற்றும் நட்டா ஆகியோரும் என்றனர். இதுவும் சர்ச்சையாகி இருக்கிறது. தொடர்ந்து பிரதமர் மோடியே அதை வகிப்பதால் கட்சிக்குள் அடுத்த பிரதமருக்கான போட்டி இருக்கிறதா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி தேசிய திறனாய்வு கூட்டணிக்கு 400 தொகுதிகளுக்கு மேல் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என தொண்டர்களை கேட்டுக் கொண்டார். பாரதிய ஜனதா கட்சிக்கு மட்டும் 370 தொகுதிகள் வெற்றியை தர வேண்டும் என அவர் கட்டளையிட்டார். மேலும் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவை பொருளாதார மற்றும் அனைத்து துறைகளிலும் சிறந்த நாடாக மாற்றியது பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி என தெரிவித்தார்.

English Summary: During BJP conclave at new delhi amit shah stop jp natta from waving his hand to party members. It creates controversy in bjp.

Read more: https://1newsnation.com/we-not-only-build-temples-we-built-hospitals-too-pm-modi-speech-at-shri-kalki-dham-stone-laying-festival/

Tags :
Advertisement