முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பெங்களூர் ரோடு ஷோ-வில் பங்கேற்கும் அமித்ஷா

11:55 AM Apr 02, 2024 IST | Mari Thangam
Advertisement

மக்களவைத் தேர்தலையொட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று பெங்களூரில் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.

Advertisement

கர்நாடகாவில் 14 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி, தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. கர்நாடகாவில் பிரதமர் மோடி இரண்டு முறை பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று பெங்களூரில் பிரச்சாரம் செய்கிறார். இதற்காக நேற்று இரவு பெங்களூரு வந்த அமித்ஷா, இன்று பாஜக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சிகளான ஜனதா தளம் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

தொடர்ந்து சிக்கபள்ளாப்பூர், தும்கூர், தாவாங்கேரே, சித்ரதுர்கா, பிதார், பெல்காம் ஆகிய பாராளுமன்ற தொகுதிகளின் மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். அதன் பின்னர், பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடைபெறும் தொழிலாளர் மாநாட்டில் பங்கேற்று பேசுகிறார். பின்னர் பெங்களூரு ஊரக பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சன்னப்பட்டிணத்தில் அமித்ஷா ரோடு ஷோவில் கலந்து கொண்டு பொதுமக்களிடம் ஆதரவு திரட்டுகிறார். அமித்ஷாவுடன் ஜனதா தளம் மாநில தலைவர் குமாரசாமியும் பங்கேற்கவுள்ளார்.

கடந்த தேர்தலில் பெங்களூரு ஊரக தொகுதியில் பா.ஜ.க. தோல்வி அடைந்தது. இதையடுத்து இம்முறை முதல் வெற்றி இங்கிருந்து தொடங்கவேண்டும் என்ற அடிப்படையில் அமித்ஷா தனது பிரசாரத்தை கிராமப்புறங்களில் இருந்து தொடங்குவதாக பா.ஜ.க. நிர்வாகிகள் கூறினர்

Tags :
AmithshakarnataParliment election
Advertisement
Next Article