For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நாளை மறுநாள் தமிழ்நாடு வருகிறார் அமித்ஷா -ரோடு ஷோவில் பங்கேற்பு!

05:50 PM Apr 10, 2024 IST | Mari Thangam
நாளை மறுநாள் தமிழ்நாடு வருகிறார் அமித்ஷா  ரோடு ஷோவில் பங்கேற்பு
Advertisement

இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட மத்திய அமைச்சர் அமித் ஷாவின் ரோடு ஷோ நாளை மறுநாள் காரைக்குடியில் நடைபெறுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

Advertisement

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19 ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கிய நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை மறுநாள் (ஏப்.,12) தமிழகம் வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்.,12ம் தேதி மாலை 3:05 மணிக்கு மதுரை விமான நிலையம் வரும் அமித்ஷா, அங்கிருந்து சிவகங்கைக்கு ஹெலிகாப்டர் மூலமாக செல்கிறார். அங்கு மாலை 3:50 மணிக்கு பா.ஜ., வேட்பாளர் தேவநாதன் யாதவை ஆதரித்து 2 கி.மீ தூரம் 'ரோடு ஷோ' நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

பின்னர் 5 மணிக்கு கோட்டை பைரவர் கோயில், ராஜராஜேஸ்வரி கோயிலில் தரிசனம் செய்துவிட்டு, மீண்டும் ஹெலிகாப்டரில் மதுரை திரும்புகிறார். அதனைத்தொடர்ந்து, மதுரையில் பாஜக வேட்பாளர் ராம சீனிவாசனை ஆதரித்து 2 கி.மீ தூரம் 'ரோடு ஷோ' நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இரவு 7:30 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்கிறார்.

மறுநாள் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் காலை 9.50 மணிக்கு ரோடு-ஷோவில் பங்கேற்கும் அமித்ஷா பிற்பகல் 3 மணிக்கு நாகையில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், மாலை 6.30 மணிக்கு தென்காசியில் நடைபெறும் ரோடு-ஷோவில் பங்கேற்று வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

Tags :
Advertisement