For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

BJP: ஏப்ரல் 12ஆம் தேதி இரண்டு நாள் பயணமாக தமிழகம் வரும் அமித் ஷா...!

06:00 AM Apr 11, 2024 IST | Vignesh
bjp  ஏப்ரல் 12ஆம் தேதி இரண்டு நாள் பயணமாக தமிழகம் வரும் அமித் ஷா
Advertisement

மக்களவைத் தேர்தல் பிரசாரத்திற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 12ஆம் தேதி தமிழகம் வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ‌.

Advertisement

திருத்தப்பட்ட அட்டவணையின்படி, மத்திய உள்துறை அமைச்சர் ஏப்ரல் 12-ம் தேதி "மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சிவகங்கைக்குச் செல்லும் அவர் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் தேவநாதன் யாதவுக்கு ஆதரவாக மாலை 3.50 மணி முதல் 4.50 மணி வரை 2 கி.மீ தூரம் வரை ரோட் ஷோவில் பங்கேற்க உள்ளார். பின்னர், மதுரையில் மாலை 6.10 மணி முதல் 7.10 மணி வரை 2 கி.மீ. தூரம் ரோட் ஷோ நடத்தி, பா.ஜ.க வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசனுக்காக பிரசாரம் செய்கிறார்.

ஏப்ரல் 13-ம் தேதி கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியின் தக்கலைக்குச் செல்லும் அவர் காலை 9.50 மணி முதல் 10.50 மணி வரை பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக 2 கி.மீ தூரம் வரை ரோட் ஷோ பேரணி நடத்துகிறார். பின்னர், நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியின் திருவாரூர் சென்று பாஜக வேட்பாளர் எஸ்ஜிஎம் ரமேஷுக்கு ஆதரவாக நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். பின்னர் தென்காசி மக்களவைத் தொகுதி தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் ஜான்பாண்டியனை ஆதரித்து ரோட் ஷோ நடத்த உள்ளார்.

Advertisement