அசரவைக்கும் அமெரிக்காவின் பதக்க எண்ணிக்கை!. மீண்டும் ஆதிக்கத்தில் சீனா!. இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?
Olympic medals: பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தொடரில் ஒட்டுமொத்த உலகமும் திரும்பி பார்க்கும் வகையில் அமெரிக்காவை அசுர வேகத்தால் பதக்கங்களை வாரி குவித்து வருகிறது. ஆகஸ்ட் 10ம் தேதி முடிவின்படி, 38 தங்கம், 42 வெள்ளி, 42 வெண்கலம் என 122 பதக்கங்களுடன் 2வது இடத்தில் உள்ளது. போட்டிப்போட்டுக்கொண்டு தங்கப்பதக்க எண்ணிக்கையில் ஆதிக்கம் செலுத்தும் சீனா, 39 தங்கம், 27 வெள்ளி, 24 வெண்கலம் என 90 பதக்கங்களுடன் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தியா 1 வெள்ளி மற்றும் 5 வெண்கல பதக்கங்களுடன் மொத்தம் 6 பதக்கங்களை வென்றுள்ளது.
10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர் வெண்கல பதக்கம் வென்று அசத்தினார். இதேபோன்று 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு குழு போட்டியில் மனு பாக்கரும், சரப்ஜோத் சிங்கும் பங்கேற்றனர். இருவரும் வெண்கல பதக்கத்தை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தனர்.
22 வயதாகும் இளம் வீராங்கனை மனு பாக்கருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. ஒரே ஒலிம்பிக் தொடரில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார் மனு பாக்கர். இதேபோன்று 50 மீட்டர் ரைபிள் துப்பாக்கி சுடதல் போட்டியில் இந்தியாவின் ஸ்வப்னில் குசாலே 3 ஆவது இடத்தை பிடித்து வெண்கல பதக்க்ததை வென்றார். இந்த பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற புதிய சாதனையையும் ஏற்படுத்தினார் ஸ்வப்னில் குசாலே.
ஒட்டு மொத்தமாக இந்தியாவின் துப்பாக்கி சுடுதல் அணி இந்தியாவுக்கு 3 பதக்கங்களை பெற்றுத் தந்தது. இதேபோன்று தங்கம் வெல்லும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய ஆடவர் ஹாக்கி அணி, அரையிறுதியில் ஜெர்மனியிடம் தோல்வியடைந்தது. வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் ஸ்பெயினை வீழ்த்தி இந்திய அணி பதக்கத்தை கைப்பற்றியது. இதேபோன்று தங்கம் வெல்வார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளி பதக்கத்தை இந்தியாவுக்கு பெற்றுக் கொடுத்துள்ளார்.
26 வயதான அவர் தனது இரண்டாவது சுற்றில் 89.45 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு டோக்கியோவில் 87.58 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்றிருந்தார். பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரம் எறிந்து ஒலிம்பிக் சாதனையை முறியடித்து தங்கம் வென்றார். இதேபோன்று ஆடவருக்கான மல் யுத்தம் 57 கிலோ பிரிவில் இந்தியாவின் அமன் ஷெராவத் வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.
ஒட்டு மொத்தமாக இந்தியா 1 வெள்ளி, 5 வெண்கலம் என 6 பதக்கங்களை பெற்றுள்ளது. இருப்பினும், பதக்க பட்டியலில் தற்போதைய நிலவரப்படி இந்தியா 71 ஆவது இடம் வகிக்கிறது. அடுத்தடுத்த இடங்களில் ஆஸ்திரேலியா, ஜப்பான், பிரான்ஸ், பிரிட்டன், தென்கொரியா நாடுகள் உள்ளன.
Readmore: அதிர்ச்சி!. ஸ்க்ரப் டைபஸால் முதல் மரணம்!. இந்த நோயைப் பற்றி தெரியுமா?