For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அமெரிக்காவின் உயரிய விருதை பெற்ற சந்திரயான்-3 குழு!

01:20 PM Apr 10, 2024 IST | Mari Thangam
அமெரிக்காவின் உயரிய விருதை பெற்ற சந்திரயான் 3 குழு
Advertisement

இந்தியாவின் சந்திரயான்- 3  குழுவுக்கு  அமெரிக்காவின் விண்வெளி ஆய்வுக்கான 2024 ஜான் எல்.ஜாக் ஸ்விகர்ட் ஜூனியர் விருது அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

நிலவை  ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ கடந்த ஆண்டு ஜூலை மாதம் 14-ம் தேதி சந்திரயான் 3 என்ற விண்கலத்தை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம் 3 ராக்கெட் மூலம் மதியம் 2.35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23-ம் தேதி நிலவின் தென் துருவப் பகுதியில் சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன் மூலம் அமெரிக்கா, ரஷ்யாவைத் தொடர்ந்து இந்தியா நிலவில் கால் பதித்தது. சந்திரயான் 3 விண்கலம் மூலம் நிலவின் தென் துருவத்தில் மெதுவாக தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.

இந்நிலையில், அமெரிக்காவில் கொலரோடாவில் வருடாந்திர விண்வெளி கருத்தரங்கம் நடைபெற்றது. அதில், விண்வெளி ஆராய்ச்சிக்காக, சந்திரயான் 3 திட்ட குழுவுக்கு மிகவும் மதிப்பு வாய்ந்த ஜான் எல்.’ஜேக் ஸ்விகெர்ட் ஜூனியர் விருது நேற்று வழங்கப்பட்டது. அந்த விருதை ‘இஸ்ரோ’ சார்பில் ஹூஸ்டன் நகரில் உள்ள இந்திய துணை தூதர் டி.சி.மஞ்சுநாத் பெற்றுக்கொண்டார். இது இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவமாக பார்க்கப்படுகிறது.

Tags :
Advertisement