For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஹிந்து எப்படி அமெரிக்க அதிபராகலாம்.? - அதிபர் வேட்பாளர் விவேக் ராமசாமியின் நச் பதில்.!

05:30 PM Dec 15, 2023 IST | 1newsnationuser4
ஹிந்து எப்படி அமெரிக்க அதிபராகலாம்     அதிபர் வேட்பாளர் விவேக் ராமசாமியின் நச் பதில்
Advertisement

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் அடுத்த வருடம் நடைபெற இருக்கிறது. தற்போது அந்த நாட்டில் ஜனநாயக கட்சியைச் சார்ந்த ஜோ பைடன் அதிபராக இருந்து வருகிறார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு தேர்தலில் டொனால்ட் ட்ரம்பை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

அமெரிக்கா ஐக்கிய நாடுகளை பொறுத்தவரை ஜனாதிபதி தேர்தல் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும். அங்கு இரண்டு கட்சிகள் மட்டுமே அரசியலில் போட்டியிடுகின்றன. அவற்றில் ஒன்று குடியரசு கட்சி மற்றொன்று ஜனநாயக கட்சி. ஜனநாயக கட்சியின் சார்பாக தற்போதைய அதிபர் ஜோ பைடன் வர இருக்கின்ற தேர்தலில் போட்டியிட இருக்கிறார்.

குடியரசு கட்சியின் சார்பில் பல்வேறு நபர்கள் போட்டியிட விருப்பம் தெரிவித்திருப்பினும் இந்தியாவைச் சார்ந்த விவேக் ராமசாமி அதிபர் வேட்பாளர் பட்டியலில் முன்னணியில் இருக்கிறார். இவர் கேரள மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

இந்நிலையில் ஒரு ஹிந்து எப்படி அமெரிக்காவின் ஜனாதிபதி ஆகலாம் என்ற கேள்விக்கு பதிலளித்திருக்கும் விவேக் ராமசாமி "அவர்கள் கூறுவதை நான் ஏற்க முடியாது, என தெரிவித்த அவர் இந்து மதங்களும், கிறிஸ்தவ மதங்களும் பொதுவான கருத்துக்களையே போதிக்கின்றன என தெரிவித்தார். மேலும் அமெரிக்காவில் மதத்தை பரப்ப நான் சரியான நபர் அல்ல என்றும் அமெரிக்கா எதற்காக நிறுவப்பட்டதோ அந்தக் கொள்கைகளுக்காக என்றுமே உயர்ந்து நின்று குரல் கொடுப்பேன்" என தெரிவித்திருக்கிறார்.

Tags :
Advertisement