For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

களைகட்டிய அமெரிக்க தேர்தல்..!! களத்தில் இறங்கிய 6 இந்திய வம்சாவளியினர் வெற்றி பெற்று அசத்தல்..!!

The five Indian-origin Sri Thanedar, Raja Krishnamurthy, Ro Khanna, Pramila Jayapal and Ami Pera won again and retained their positions.
02:30 PM Nov 06, 2024 IST | Chella
களைகட்டிய அமெரிக்க தேர்தல்     களத்தில் இறங்கிய 6 இந்திய வம்சாவளியினர் வெற்றி பெற்று அசத்தல்
Advertisement

அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடைபெறும். தற்போது, அதிபராக இருக்கும் ஜோ பைடனின் பதவி காலம் முடிவடைந்த நிலையில், நேற்று நாடு முழுவதும் புதிய அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. களத்தில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸும் களமிறங்கியிருந்தனர். முன்னதாக ஜோ பைடன் களமிறக்கப்பட்டிருந்தார். ஆனால், அவரது உடல் நலன் காரணமாக கமலா ஹாரிஸ் போட்டியிட்டார்.

Advertisement

இந்த தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளதாக பாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டிரம்ப் விரைவில் பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் 6 இந்திய வம்சாவளியினர் வெற்றி பெற்று அசத்தியுள்ளனர்.

இதில், இந்திய வம்சாவளி வழக்கறிஞர் சுஹாஸ் சுப்ரமணியம், வர்ஜீனியா மற்றும் கிழக்குக் கடற்கரையில் இருந்து மக்கள் பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளி உறுப்பினர் என்ற பெருமையை பெற்றுள்ளார். தற்போது விர்ஜீனியா மாகாண செனட்டராக பதவி வகித்து வரும் அவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட மைக் கிளான்சியை தோற்கடித்தார்.

இதே போல், ஏற்கனவே மக்கள் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களாக பதவி வகித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீ தானேதர், ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோ கண்ணா, பிரமிலா ஜெயபால் மற்றும் அமி பேரா ஆகிய ஐவரும் மீண்டும் வெற்றி பெற்று தங்கள் பதவியை தக்க வைத்துக் கொண்டனர்.

Read More : “15 மில்லி உடலுக்குள் சென்றாலே மரணம் நிச்சயம்”..!! விஷம் கொடுத்து காதலனை கொன்ற வழக்கில் பகீர் வாக்குமூலம்..!!

Tags :
Advertisement