"அம்பேத்கர் பார்த்தால் வெட்கப்பட்டு தலைகுனிந்து போவார்" சம்பிரதாயத்திற்காக மழை தண்ணீரில் நின்று போஸ்…! தவெக தலைவர் விஜய் காட்டம்…
சென்னை வர்த்தக மையத்தில் இன்று நடைபெற்ற எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற நூல் வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டு நூலை வெளியிட்டார். தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் “ அம்பேத்கர் நினைவு நாளில் இந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டது எனக்கு கிடைத்த வரமாக நினைக்கிறேன். 100 ஆண்டுகளுக்கு முன்பே நியூயார்க் சென்று அங்குள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர் ஒருவர் இருந்தார். ஆனால் அவர் எந்த சூழலில் படித்தார் என்பது தான் பெரிய விஷயம்.
அன்று அந்த மாணவருக்கு அத்தனை சக்திகளும் அவருக்கு எதிராக இருந்தது. ஆனால் ஒரே ஒரு சக்தி தான் அவரை படி என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தது. அது தான் அவரின் மனதிற்குள் இருந்த வைராக்கியம். அந்த வைராக்கியம் தான் இன்று இந்த நாட்டின் மிகப்பெரிய ஆளுமையாக மாறியவர். அந்த மாணவர் வேறு யாருமில்லை அம்பேத்கர் தான். அம்பேத்கரின் வைராக்கியம் பிரமிக்கத்தக்கது.
பிறப்பால் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அரசியல் சாசன சட்டத்தை வகுத்து நாட்டிற்கே பெருமை தேடி தந்தவர். சமூக கொடுமை தான் அம்பேத்கரை சமத்துவத்திற்காக போராட வைத்தது. அம்பேத்கரின் வெயிட்டிங் ஃபார் விசா என்ற கோரிக்கை என்னை பிரமிக்க வைத்தது. ஜனநாயகத்தின் ஆணிவேர் தேர்தல்கள் தான். அந்த தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும் என்பது தான் என் கோரிக்கை. அம்பேத்கரின் பிறந்தநாளான் ஏப்ரல் 14-ம் தேதியை ’இந்தியாவின் ஜனநாயக உரிமைகள் தினமாக அறிவிக்க வேண்டும்’ என்பது தான் எனது மற்றொரு கோரிக்கை. அதை இந்திய ஒன்றிய அரசிடம் நான் முன்வைக்கிறேன்.
மணிப்பூரில் நடப்பது நமக்கு தெரியும் ஆனால் நமக்கு மேலே இருக்கும் மத்திய ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சரி அணைக்க தான் அந்த அரசு அப்படி இருக்குனு பார்த்தா இங்க இருக்க அரசு எப்படி இருக்கு, இங்கே தமிழ்நாட்டில் வேங்கை வயல் எனும் ஊரில் என்ன நடந்ததுன்னு எல்லோருக்கும் தெரியும், சமூக நீதி பேசும் இங்கே இருக்கும் அரசு, அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்ளோ காலங்கள் தாண்டி ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லையே. இதையெல்லாம் இன்றைக்கு அம்பேத்கர் அவர்கள் பார்த்தால் வெட்கப்பட்டு தலைகுனிந்து போவார். நடக்கும் பல கொடுமைகளுக்கு தீர்வு, மக்கள் நலனில் அக்கறை கொண்ட நல்ல ஆட்சி அமைய வேண்டும்.
இந்தியாவில் நடக்கும் தேர்தல்கள் நியாயமாக நடக்கிறதா என்ற சந்தேகம் இல்லை. ஆனால் அது நியாயமாக தான் நடக்கிறது என்ற நம்பிக்கை ஏற்படுத்தப்பட வேண்டும். சம்பிரதாயத்திற்காக மழை தண்ணீரில் நின்று போஸ் கொடுக்கும் எண்ணம் எனக்கு இல்லை. ஆனால் சந்தர்ப்ப சூழல்களால் நானும் அதை சில நேரங்களில் செய்ய வேண்டி இருக்கிறது. இருமாப்போடு 200 தொகுதியிலும் என்று சொல்பவர்களுக்கு நான் எச்சரிக்கைவிடுகிறேன். உங்கள் கூட்டணி கணக்குகள் அனைத்தும் 2026ல் மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள்" என்று மிக கடுமையாக பேசியுள்ளார் தவெக தலைவர் விஜய்.