அம்பானி வீட்டு திருமணத்தில் பங்கேற்காத பிரபலம்.... காரணம் இதுவா?
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமண நிகழ்ச்சியில் நடிகர் அக்ஷய்குமார் கலந்து கொள்ளாததால் பாலிவுட்டில் பேசுபொருளாகி உள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் மனைவி நீதா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெறுகிறது. இந்த திருமணம் இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளது.
மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் இந்த ஜோடியின் பிரமாண்ட திருமண விழா நடைபெறுகிறது. இந்த திருமண விழாவை முன்னிட்டு அம்பானி குடும்பத்தினர் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தனர். அதன்படி, கடந்த மார்ச் மாதம் குஜராத்தின் ஜாம்நகரில் இவர்களின் முதல் ப்ரீ வெட்டிங் விழா நடைபெற்றது. இந்த கோலாகல நிகழ்ச்சியில் இந்திய திரைப்பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள் மட்டுமின்றி சர்வதேச பிரபலங்களும் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து 2-வது ப்ரீ வெட்டிங் விழா ஐரோப்பாவில் சொகுசு கப்பலில் கோலாகலமாக நடந்தது.
இதை தொடர்ந்து கடந்த வார இறுதியில் சங்கீத், ஹல்தி உள்ளிட்ட பாரம்பரிய பூஜைகளுடன் அம்பானி வீட்டு திருமண விழா களைகட்டி உள்ளது. இந்த விழாவில் சல்மான் கான், ஜான்வி கபூர், சாரா அலி கான், அனன்யா பாண்டே, ஓர்ஹான் அவத்ரமணி, போனி கபூர், ஷிகர் பஹாரியா, ராகுல் வைத்யா, உதித் நாராயண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அம்பானி வீட்டு திருமணத்திற்கு பல பாலிவுட் நட்சத்திரங்கள், தொழில்துறை தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் சர்வதேச பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் அக்ஷய்குமார் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
நடிகர் அக்ஷய்குமாருக்கு கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த திருமண விழாவில் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
read more... உலகின் மிக விலையுயர்ந்த பள்ளிகள்!! ஆண்டு கட்டணம் ரூ. 1.34 கோடி! எங்க இருக்கு தெரியுமா?