முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சர்ப்ரைஸ் கொடுத்த அம்பானி!. JioBharat புதிய போன் அறிமுகம்!. விலை இவ்வளவு கம்மியா?. அம்சங்கள் இதோ!

Ambani gave a surprise! JioBharat New Phone Launch!. Is the price so expensive? Here are the features!
08:11 AM Oct 16, 2024 IST | Kokila
Advertisement

JioBharat: முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ பாரத்தின் V3 மற்றும் V4 என்ற புதிய 4ஜி போனை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் விலை மற்றும் முக்கிய விவரங்களை காணலாம்.

Advertisement

இந்திய மொபைல் காங்கிரஸ் (ஐஎம்சி) 2024 நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அப்போது, ரிலையன்ஸ் ஜியோ பாரத் ஃபோன் வரிசையில் ஜியோ பாரத் V3 மற்றும் ஜியோ பாரத் V4 என்ற 4ஜி போன்களை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பட்ஜெட்டுக்கு ஏற்ற இந்த மாடலில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த போனின் விலை ரூ.1,099 என்று அறிவித்துள்ளது.

UPI அடிப்படையிலான டிஜிட்டல் பணம் செலுத்துதல் மற்றும் வீடியோ ஸ்ட்ரீமிங் ஆகியவற்றிற்கான அணுகலை வழங்குகிறது. ஜியோடிவி, ஜியோபே மற்றும் ஜியோசினிமா போன்ற சேவைகளை இந்த சிறிய அம்சத் தொலைபேசிகளிலிருந்து பயனர்கள் நேரடியாக அனுபவிக்க முடியும். இந்த புதிய மாடல் பெரிய திரை மற்றும் வலுவான பேட்டரியை வழங்குகிறது. பட்ஜெட் மொபைல் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது நல்ல தேர்வாக இருக்கும்.

23 இந்திய மொழிகளில் பயன்படுத்த கூடிய இந்தப் புதிய 4G ஃபீச்சர் போன்கள், விரைவில் அமேசான், ஜியோ மார்ட் மற்றும் பிற ஆஃப்லைன் ஸ்டோர்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. பயனர்கள் மாதத்திற்கு ரூ.123 க்கு ப்ரீபெய்ட் ரீசார்ஜ் செய்து அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் 14GB டேட்டாவைப் பெறலாம். ரிலையன்ஸ் ஜியோ கடந்த ஆண்டு அறிமுகப்படுத்திய ஜியோ பாரத் V2 வின் வெற்றியைத் தொடர்ந்து புதிய ஜியோ பாரத் V3 மற்றும் V4 4G ஃபீச்சர் போன்களை அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில் JioBharat V3 ஸ்டைலிஷ் வடிவமைப்பைக் கொண்ட மாடலாக உள்ளது. JioBharat V4 மாடலில் செயலிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு போன்களிலும் 1,000mAh பேட்டரி, 128GB வரை நீட்டிக்கக்கூடிய மெமரி ஆகியவை உள்ளன.

Readmore: மழைக்காலத்தில் பரவும் முக்கிய நோய்கள்!. தடுக்கும் வழிகளை தெரிஞ்சுக்கோங்க!

Tags :
JioBharat New Phonemukesh ambairelianceV3 and V4 Launch
Advertisement
Next Article