'Work From Home' அழைக்கும் பிரபல ஐடி நிறுவனம்..!! மிஸ் பண்ணிடாதீங்க.. ரெடியா?
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு அமேசான் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சார்பில் ஆன்லைன் வர்த்தகம், க்ளைட் கம்ப்யூட்டிங், ஆன்லைன் விளம்பரம், டிஜிட்டல் ஸ்ட்ரிம்மிங், ஏஐ உள்ளிட்ட பல்வேறு துறை சர்வீஸ்கள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னையில் அமேசான் நிறுவனம் இயங்கி வரும் நிலையில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
என்னென்ன தகுதி ;
- இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
- மைக்ரோசாட் ஆபிஸ் தயாரிப்புகள் மற்றும் அப்ளிகேஷனில் 6 மாதங்களுக்கு அதிகமாக பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
- கான்டக்ட் சென்டர், கஸ்டமர் சர்வீஸ், எச்ஆர் அல்லது அதற்கு தொடர்புடைய பிரிவில் ஒரு ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
- கஸ்டமரை தொடர்பு கொள்வது, பிரச்சனைகளை தீர்க்கும் திறன் கொண்டிருக்க வேண்டும்.
- டேட்டா ஸ்பேஸ், ரீசர்ஜிங் ஸ்கில்ஸ், ஆங்கிலத்தில் பிழையின்றி பேசவும், எழுதவும், தெரிய வேண்டும்.
பிற தகவல்கள் ;
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அமேசான் நிறுவனத்தின் இணையதளம் சென்று விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி குறிப்பிடப்படவில்லை. இந்த பணி என்பது ஒப்பந்த அடிப்படையிலானது. தற்போது வேலைக்கு தேர்வாகும் நபர்கள் 10 மாதங்கள் வரை பணியமர்த்தப்படுவர்கள். பணிக்கு தேர்வாகும் நபர்கள் ஷிப்ட் முறையில் பணியாற்றலாம். அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தே வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது. தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படும்.
Read more ; TNPSC Group 4 தேர்வர்களுக்கு ஷாக்… ரிசல்ட் எப்போது தெரியுமா..?