'அமேசான் ப்ரைம்' வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி..!! அதிகரிக்க இருக்கும் மாத கட்டணம்.! வெளியான புதிய அறிவிப்பு.!
தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் ஆண்ட்ராய்டு போன்களின் வருகை இவற்றால் ஓடிடி தளங்களின் வருகையும் அதிகரித்து இருக்கிறது. இந்தியாவில் நெட்ப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஜீ 5, சோனி லைவ் போன்ற ஓடிடி தளங்கள் சர்வதேச திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் போன்றவற்றை உயர் தொழில்நுட்ப தரத்தில் மக்களுக்கு வழங்கி வருகிறது.
இவற்றில் அமேசான் ப்ரைம் இந்தியாவில் முன்னணியில் இருக்கும் ஓடிடி தளமாகும். இவற்றில் மாத சந்தா மற்றும் வருட சந்தா முறையில் திரைப்படங்கள் மற்றும் இணையதள தொடர்களை பார்க்கலாம். இனி வருகின்ற மாதங்களில் இவற்றின் சந்தா அதிகரிக்கும் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
இங்கிலாந்து அமெரிக்கா மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் திரைப்படங்கள் மற்றும் தொடர்களை காணும் போது அவற்றிற்கு இடையே விளம்பரங்களை ஒளிபரப்பு செய்யும் புதிய திட்டத்தை அமேசான் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த விளம்பரங்கள் இல்லாமல் திரைப்படங்களை காண்பதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் இந்த புதிய முறை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.