1000 ரூபாய் முதலீடு; 115 மாதம்.! கை நிறைய சேமிப்பு.! தபால் துறையின் அருமையான சேமிப்பு திட்டம்.!
இந்திய தபால் துறை சார்பாக பல்வேறு சேமிப்பு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதில் முக்கியமான ஒன்று கிசான் விகாஸ் பத்ரா என்ற திட்டமாகும். இந்தத் திட்டம் அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் தற்போது முதன்மையில் இருக்கிறது. மேலும் இந்தத் திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.5% வட்டியும் வழங்குவது இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமாகும். இந்தத் திட்டங்களில் சேமிப்பு கணக்கை தொடங்க தகுதி உள்ளவர்கள் யார்.?மற்றும் இந்தத் திட்டத்தில் கணக்கு துவங்குவதற்காக தேவைப்படும் ஆவணங்கள் என்ன.?என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
18 வயதை தாண்டிய ஒவ்வொரு இந்திய குடிமகனும் இந்தத் திட்டத்தில் கணக்கை துவங்கி பலன் பெற முடியும். பண வளர்ச்சி குன்றிய நபர்களின் பெயரில் கணக்குகள் துவங்கப்பட்டால் அவர்களுக்கு கார்டியன் நியமிப்பது கட்டாயமாகும். இந்தத் திட்டம் சந்தைகளின் மதிப்பு மற்றும் ஏற்ற இறக்கங்களை பொருட்படுத்தாமல் உங்களது பணத்திற்கு முழு பாதுகாப்பு வழங்குகிறது. இந்தக் கணக்கை குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாயுடன் துவங்கலாம். கணக்குத் துவங்கிய பிறகு எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்து கொள்ளலாம். இவ்வளவுதான் அதிகபட்ச தொகை என்ற உச்சவரம்பு எதுவும் இல்லை.
நாட்டில் இருக்கக்கூடிய எந்த ஒரு தபால் அலுவலகத்திலும் இந்த கணக்கை தொடங்க இயலும். இந்தத் திட்டத்தின் கால அளவு 115 மாதங்கள் ஆகும். அதாவது 9.5 வருடங்கள் முடிவில் நீங்கள் செலுத்திய பணத்திற்கான லாபத்தை பெறுவீர்கள். இந்தத் திட்டத்திற்கு வருமான வரி சட்டம் 19 A அடிப்படையில் வரிச்சலுகையும் இருக்கிறது. எனவே வருமான வரி பற்றிய பயமும் தேவையில்லை. கிசான் விகாஸ் பத்ரா திட்டத்திற்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தபால் நிலையம் அல்லது வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும். இவற்றிற்கு பாஸ்போர்ட் ஆதார் அட்டை டிரைவிங் லைசென்ஸ் மற்றும் பான் கார்டு ஆகியவற்றை ஆவணங்களாக சமர்ப்பிக்கலாம். உங்களது ஆவணங்கள் மற்றும் விண்ணப்பம் சரிபார்க்கப்பட்ட பின்னர் நீங்கள் செலுத்த வேண்டிய முதலீட்டுத் தொகையை காசோலை அல்லது டிமாண்ட் டிராப்ட் மூலமாக செலுத்த வேண்டும். பணம் செலுத்திய பிறகு உங்களுக்கான கிசான் விகாஸ் பத்ரா சான்றிதழை அளிப்பார்கள். இந்தச் சான்றிதழை பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இந்தத் திட்டத்தின் உதிர்வு காலத்திற்குப் பின்னர் பணம் எடுக்கும் போது இந்த சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.