அட்டகாசமான போஸ்ட் ஆபீஸ் திட்டம்..!! 5 ஆண்டுகளில் ரூ.28 லட்சம் கிடைக்கும்..!! ரூ.1,000 முதலீடு செய்தால் போதும்..!!
தபால் நிலையங்களில் பல்வேறு விதமான சேமிப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போதைய காலக்கட்டத்தில் பலரும் சேவிங்க்ஸ் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அவர்களுக்கு போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் சிறந்த தேர்வாக இருக்கும். சரியான திட்டங்களை தேர்வு செய்து முதலீடு செய்தால், இதில் நல்ல லாபத்தையும் பார்க்க முடியும்.
தபால் அலுவலக தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC) திட்டத்தில் முதலீடு செய்தால், அதிக வருமானம் கிடைக்கும். அதாவது, 5 ஆண்டுகளில் ரூ.28 லட்சம் வரை கிடைக்கும். இத்திட்டத்தின் கீழ் நீங்கள் கணக்கு துவங்க விரும்பினால், அருகில் உள்ள தபால் அலுவலகத்திற்கு சென்று தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் கணக்கை துவங்கிக் கொள்ளலாம். மேலும், இத்திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.1,000 முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்சமாக டெபாசிட் செய்ய எந்த விதிகளும் இல்லை.
இத்திட்டத்திற்கு தற்போது 7.7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டன் கால அளவு 5 ஆண்டுகள் ஆகும். இத்திட்டத்தில் ஒருவர் தனியாகவும் அல்லது இரண்டு, மூன்று பேர் சேர்ந்து கூட்டுக் கணக்காகவும் துவங்கிக் கொள்ள முடியும். குழந்தைகளின் பெயரின் கணக்கு துவங்கும் பட்சத்தில், அவரது பெற்றோர்கள் பாதுகாவலராக இருந்து டெபாசிட் செய்யலாம்.
இத்திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் முதலீடு செய்ய வேண்டும். இதனை மொத்தமாகவோ அல்லது தொடர்ந்து மாதந்தோறுமோ 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்ய வேண்டும். 7.7 சதவீத வட்டி விகிதத்தின் படி, உங்களுக்கு ரூ. 6,73,551 தொகை கிடைக்கும். இதன் மூலம் ஐந்தாண்டுகளுக்கு பிறகு மொத்தமாக ரூ. 21,73,551 தொகையை பெற்றுக் கொள்ளலாம்.
Read More : அண்ணா நகரில் அதிரடி காட்டிய போலீஸ்..!! மசாஜ் சென்டரில் மஜாவாக நடந்த பாலியல் தொழில்..!! பெண் கைது..!!