அசத்தல்..!! இந்தியாவில் முதல் ஏஐ பல்கலைக்கழகம்..!! எந்த மாநிலத்தில் தெரியுமா..? அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..!!
மகாராஷ்டிர மாநிலத்தில் முதல் ஏஐ பல்கலைக்கழகம் அமைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதை நவீன தொழில்நுட்ப காலகட்டத்தில் செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ, அனைத்து துறைகளையும் ஆக்கிரமித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு மனிதர்கள் மற்றும் தொழில்நுட்பம் செய்யக்கூடிய கடினமாக மற்றும் சிக்கல்கள் நிறைந்த வேலைகளை விரைவாக செய்து முடிப்பதால், அனைத்து நிறுவனங்களிலும் இதை பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில் தான், இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் முதல் ஏஐ பல்கலைக்கழகம் அமையவுள்ளதாக ஐடி துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மகாராஷ்டிரா, செயற்கை நுண்ணறிவு பல்கலைக்கழகம் கொண்ட முதல் மாநிலமாக திகழும் என்று கூறியுள்ளார். மேலும், உயர் கல்வி துறையின் ஒத்துழைப்புடன் இது விரைவில் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் ப்ளாக் செயின், சைபர் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் கண்டுபிடிப்புகள் உள்ளிட்டவை முக்கிய பிரிவுகளாக கொண்டுவரப்பட உள்ளன. இந்த ஏஐ பல்கலைக்கழகம் மாணவர்களின் ஆய்வுகள் மற்றும் கல்வி மேலாண்மைக்கு முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எங்கள் அரசாங்கம் வருங்கால தலைமுறையினரை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
Read More : அமைச்சர் ரகுபதிக்கு திடீர் நெஞ்சுவலி..!! தனியார் மருத்துவமனையில் அனுமதி..!! தீவிர சிகிச்சை..?