For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஆனந்த் அம்பானியின் பிறந்த நாள் பரிசு!!  விலை என்ன தெரியுமா?

11:45 AM Apr 12, 2024 IST | Mari Thangam
ஆனந்த் அம்பானியின் பிறந்த நாள் பரிசு    விலை என்ன தெரியுமா
Advertisement

ஆனந்த் அம்பானியின் 29வது பிறந்தநாள் விழாவில் அவரது நண்பர் பாரத் மெஹ்ரா வழங்கிய பரிசு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி ஏப்ரல் 10ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடினார், இந்த வருடம் அவருக்கு 29 வயது பூர்த்தி அடைகிறது. ராதிகா மெர்ச்சண்ட் உடனான நிச்சயதார்த்தத்திற்கு பிறகு வரும் முதல் பிறந்தநாள் இதுவே. ஜாம் நகரின் இந்த விழா மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் கலந்துகொண்ட, ராதா மீரா அறக்கட்டளையின் தலைவரும் சமூக சேவகருமான பாரத் மெஹ்ரா, ஆனந்த் அம்பானிக்கு தனித்துவமான பரிசு ஒன்றை வழங்கினார். ஓவிய கலைஞர் எம்.எஃப். ஹுசைனால் வரையப்பட்ட மயக்கும் விநாயகர் ஓவியம் தான் அந்த பரிசு. Socotra Dragon Yemeni tree எனப்படும் யேமன் மரத்தில் வரையப்பட்டிருப்பதால் மதிப்புமிக்கதாக பார்க்கப்படுகிறது.

இதன் விலை பற்றிய தகவல் வெளியாகவில்லை என்றாலும், 20 நூற்றாண்டின் சிறந்த கலைஞரான எம்.எஃப். ஹுசைனின் ஓவியங்கள் கோடிக்கணக்கில் மதிப்புடையவை என்பது அனைவரும் அறிந்ததே. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags :
Advertisement