அசத்திய மருத்துவர்கள்..!! பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட பெண்..!! 3 மாதங்களில் சொந்த ஊருக்கு திரும்புவார்..!!
பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட பெண், 3 மாதங்களில் பூரண குணமடைந்து சொந்த ஊருக்கு திரும்புவார் என்று மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மருத்துவத் துறையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் பெரியளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும், நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, மாற்று உறுப்புகள் கிடைப்பதில் தாமதம் உள்ளிட்ட காரணங்களால் பலர் இறக்கின்றனர். இதன் காரணமாக செயற்கை உறுப்புகள் மற்றும் விலங்குகளின் உறுப்புகளை பொருத்தி தீவிர சிகிச்சை அளித்து மனித உயிர்களை காப்பாற்றும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக, மரபணு மாற்றப்பட்ட பன்றியின் உறுப்புகளை பயன்படுத்தி மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர். அந்த வகையில், அமெரிக்காவின் அலபாமாவைச் சேர்ந்த டோவானா லூனி (53) என்ற பெண்ணுக்கு, மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகம் பொறுத்தப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு லூனியின் உடல்நிலை தேறிய நிலையில், 11 நாட்களில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தற்போது அவர் நன்றாக இருக்கிறார். அவருக்கு பொருத்தப்பட்ட சிறுநீரகம் நன்கு வேலை செய்கிறது.
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர், அருகில் உள்ள குடியிருப்பில் தங்கியிருந்து மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு வருகிறார். ஆனாலும், சில பரிசோதனைகளுக்காக இந்த வாரம் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்னும் 3 மாதங்களில் பூரண குணமடைந்து அவரது சொந்த ஊருக்கு திரும்புவார். அதேசமயம், அவரக்கு பொறுத்தப்பட்ட பன்றியின் சிறுநீரகம் செயலிழந்துவிட்டால், அவர் மீண்டும் டயாலிசிஸ் செய்ய ஆரம்பிக்கலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மரபணு மாற்றப்பட்ட பன்றியின் உறுப்பை பெற்றுள்ள 5-வது அமெரிக்கர் லூனி. இதற்கு முன்பு பன்றியின் சிறுநீரகம் அல்லது இதயம் பொருத்தப்பட்ட 4 பேரும் இரண்டு மாதங்களுக்குள் உயிரிழந்தனர். ஆனால், லூனியின் உடல்நிலையில் வேறு பாதிப்பு இல்லை என்பதால், அவர் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. எனவே, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் புதிய நம்பிக்கை பிறந்துள்ளதாக மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Read More : விரட்டி விரட்டி கொட்டிய மலை தேனீக்கள்..!! பரிதாபமாக உயிரிழந்த கூலித்தொழிலாளி..!! 4 பேர் படுகாயம்..!!