For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அசத்தல்!.‘மிஸ் இந்தியா யுஎஸ்ஏ’ பட்டம் வென்ற சென்னை மாணவி!.

06:30 AM Dec 19, 2024 IST | Kokila
அசத்தல்  ‘மிஸ் இந்தியா யுஎஸ்ஏ’ பட்டம் வென்ற சென்னை மாணவி
Advertisement

'Miss India USA': நியூ ஜெர்சியில் நடந்த போட்டியில் அமெரிக்க வாழ் இந்தியரான கெய்ட்லின் சாண்ட்ரா (19), ‘மிஸ் இந்தியா யுஎஸ்ஏ’ பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

Advertisement

சென்னையில் பிறந்த அமெரிக்க வாழ் இந்தியரான கெய்ட்லின் சாண்ட்ரா (19), டேவிஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். கடந்த 14 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகிறார். இந்நிலையில் நியூ ஜெர்சியில் நடந்த ‘மிஸ் இந்தியா யுஎஸ்ஏ – 2024’ போட்டியில் பலர் பங்கேற்றனர். அவர்களில் மிஸ் இந்தியா யுஎஸ்ஏ – 2024 என்ற பட்டத்தை கெய்ட்லின் சாண்ட்ரா பெற்று சாதனை படைத்தார். தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களை இல்லினாய்ஸைச் சேர்ந்த சன்ஸ்கிருதி ஷர்மா ‘ திருமதி இந்தியா யுஎஸ்ஏ’ ஆகவும், வாஷிங்டனைச் சேர்ந்த அர்ஷிதா கத்பாலியா ‘மிஸ் டீன் இந்தியா யுஎஸ்ஏ’ ஆகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

இப்போட்டியில், நாற்பத்தேழு போட்டியாளர்கள் பங்கேற்றனர். மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதுகுறித்து கெய்ட்லின் சாண்ட்ரா கூறுகையில், ‘ஆடை வடிவமைப்பாளராக வர விரும்புகிறேன். மாடலிங் மற்றும் நடிப்பு துறையில் ஜொலிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த சமூகத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தவும், பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் கல்வியறிவு ஆகியவற்றில் கவனம் செலுத்த விரும்புகிறேன்’ என்றார்.

Readmore: அடி தூள்…! பணியில் இருக்கும் போது உயிரிழக்க நேர்ந்தால் குடும்ப நிதி ரூ.10 லட்சமாக உயர்வு…!

Tags :
Advertisement