அடேங்கப்பா!!! சொகுசு கப்பலை சொந்தமாக வாங்கிய ஆல்யா மானசா..
விஜய் டிவியில் ராஜா ராணி சீரியல் மூலமாக ரசிகர்களின் மத்தியில் நீங்காத இடம் பிடித்தவர் தான் ஆலியா மானசா. இவரது முதல் சீரியலிலேயே தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்தார். பின்னர், சீரியல் ஜோடியாக இருந்த இவர்கள் ரியல் ஜோடியாகினர். இந்த ஜோடிக்கு கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர். முதல் குழந்தை பிறந்ததை தொடர்ந்து ராஜா ராணி சீசன் 2 சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது இரண்டாவது முறையாக கர்ப்பமானார். அதனால் அந்த சீரியலில் இருந்து பாதியிலேயே விலகிவிட்டார். குழந்தைகள் பிறந்ததால் சில ஆண்டுகள் சீரியல் பக்கம் தலைகாட்டாமல் இருந்த ஆல்யா மானசா, கடந்த 2022-ம் ஆண்டு சன் டிவியில் நடிக்கத் தொடங்கினார். சன் டிவியில் ஒளிபரப்பான இனியா என்கிற சீரியலில் நாயகியாக ஆல்யா நடித்து வந்த நிலையில், சஞ்சீவ்வும் சன் டிவியில் கயல் என்கிற சீரியலில் ஹீரோவாக நடித்து வந்தார்.
சின்னத்திரையை பொறுத்தவரை அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஆல்யா மானசாவும் ஒருவர். இவர் ஒரு நாளைக்கு ரூ.50 ஆயிரம் சம்பளமாக வாங்கி வருகிறாராம். சின்னத்திரை மூலம் நன்கு சம்பாதித்து வரும் சஞ்சீவ் - ஆல்யா மானசா ஜோடி, அண்மையில் சென்னையில் 1.8 கோடி செலவில் தங்கள் சொந்த வீட்டை கட்டி அதில் குடியேறினர். பொதுவாக, சினிமா மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் அதிக சம்பளம் வாங்குவதால் அதை அவர்கள் ஏதாவது பிசினஸில் முதலீடு செய்வது உண்டு. அந்த வகையில் நடிகை ஆல்யா மானசாவும் தற்போது புது பிசினஸ் ஒன்றை தொடங்கி அதன் மூலம் நல்ல வருமானம் ஈட்டி வருகிறார். இந்நிலையில், தற்போது கேரளா மாநிலம் ஆலப்புழாவில் சொந்தமாக போர்ட் கவுஸ் ஒன்றை வாங்கி இருக்கிறார்.
Read more: பெற்றோர்களே எச்சரிக்கை!!! தங்க செயின் அணிந்த 10 வயது சிறுவன், சடலமாக மீட்பு..