முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஏற்கனவே 2 திருமணம்..!! ஆன்லைன் செயலி மூலம் இளைஞர்களுக்கு ஆப்படித்த பெண்..!! லட்சக்கணக்கில் மோசடி..!!

The police, who checked the bank account, revealed that Priya was from Vazhapadi, Salem district.
02:21 PM Dec 11, 2024 IST | Chella
Advertisement

கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தனக்கு வரன் தேடி செயலிகள் மூலம் பதிவு செய்திருக்கிறார். அப்போது அவருக்கு பிரியா என்ற பெண் அறிமுகமாகியுள்ளார். இதையடுத்து, இருவரும் திருமணம் செய்து கொள்வதாக முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், பிரியா தனது அக்காவின் மருத்துவச் செலவுக்காக கடந்த ஒரு வருடத்தில் சுமார் 7 லட்சம் ரூபாய் வரை அந்த விவசாயியிடம் பெற்றுள்ளார்.

Advertisement

பின்னர், விவசாயி உடனான திருமணத்தை பல்வேறு காரணங்களை கூறி தட்டிக் கழித்து வந்துள்ளார் பிரியா. ஒரு கட்டத்தில் அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டார். இதையடுத்து அந்த விவசாயி, பிரியா கொடுத்த நாமக்கல் விலாசத்திற்குச் சென்று பார்த்துள்ளார். அப்போது, அந்த முகவரி போலியானது என தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, கோவை மாவட்ட எஸ்பி அலுவலக சைபர் பிரிவில் விவசாயி புகார் அளித்தார்.

இதையடுத்து, வங்கிக் கணக்கை சோதனையிட்ட காவல்துறையினர் பிரியா, சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. விசாரணையில், பிரியாவுக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி இருப்பதும், தற்போது அவர் தனியாக வாழ்ந்து வருவதும் தெரியவந்தது. பொள்ளாச்சியை சேர்ந்த விவசாயி மட்டுமின்றி பல பேரிடம் பல லட்சம் ரூபாய் வரை மோசடி செய்தது விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Read More : மாதம் ரூ.75,000 சம்பளம்..!! IIT Madras-இல் வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Tags :
கோவைதிருமணம் வரன்மோசடி
Advertisement
Next Article