For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஏற்கனவே 3 மனைவிகள்..!! 17 வருடங்களாக இளம்பெண்ணை ஏமாற்றி உல்லாசம்..!! தாசில்தார் சிக்கியது எப்படி..?

He had been having sex with her for the past 17 years. But I only now came to know that Tahsildar Chauhan already has 3 wives.
11:40 AM Jan 18, 2025 IST | Chella
ஏற்கனவே 3 மனைவிகள்     17 வருடங்களாக இளம்பெண்ணை ஏமாற்றி உல்லாசம்     தாசில்தார் சிக்கியது எப்படி
Advertisement

மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியில் உள்ள பிண்டில் வசித்து வருபவர் 34 வயது பெண். இவர், கடந்த 8ஆம் தேதி பிதர்வார் தாலுகாவில் தாசில்தாராக பணிபுரியும் சத்ருகன் சிங் சவுகான் என்பவர் மீது காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், ”கணவன் மறைந்த பிறகு கணவரின் சகோதரர் மூலம் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட சவுகான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தார்.

Advertisement

அதை காரணம் காட்டி கடந்த 17 ஆண்டுகளாக தன்னுடன் உடலுறவு வைத்து வந்தார். ஆனால், தாசில்தார் சவுகானுக்கு ஏற்கனவே 3 மனைவிகள் இருப்பது தற்போது தான் எனக்கு தெரியவந்தது. இதை மறைத்து பல ஆண்டுகளாக அவர் தன்னை ஏமாற்றி வந்துள்ளார்” என்று அந்த பெண் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

பெண் அளித்த புகாரின் அடிப்படையில், சத்ருகன் சிங் சவுகானை தாசில்தார் பதவியில் இருந்து நீக்கம் செய்து, நில வருவாய் அலுவலகத்தில் பணியமர்த்த ஆட்சியர் தரப்பில் உத்தரவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், சத்ருகன் சிங் சவுகான் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, அரசு பெண் ஊழியர் ஒருவர் சவுகான் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Read More : ”என்கூட உல்லாசமா இருக்கணும்”..!! இளம்பெண்ணை மிரட்டிய மாமா..!! ஹோட்டலில் கொளுந்துவிட்டு எரிந்த உடல்..!! பரபரப்பு சம்பவம்..!!

Tags :
Advertisement