அனுமதிக்கப்பட்ட அளவு மட்டுமே வண்டல் மண் எடுக்க வேண்டும்...! அரசு அதிரடி உத்தரவு...
நீர்நிலைகளில் இருந்து விவசாயப் பயன்பாட்டிற்கு வண்டல் மண், களிமண் எடுத்துச் செல்வதற்கு ஏற்கனவே தெரிவித்துள்ளபடி, வட்டாட்சியரின் அனுமதி பெற்று நீர்வளத் துறை / ஊரக வளர்ச்சித் துறை பொறுப்பு அலுவலர்களால் குறியீடு செய்து காட்டப்படும் பகுதியில் மட்டும் குறிப்பிட்ட ஆழத்திற்கு மிகாமல் அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டுமே மண் எடுத்துச்செல்ல வேண்டும்.
இதுகுறித்து, சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; சேலம் மாவட்டத்தில் வண்டல், களிமண் மற்றும் மண் ஆகியவற்றை விவசாய பயன்பாடு, மட்பாண்ட தொழிலுக்கு எடுத்துச்செல்ல தகுதிவாய்ந்த 200 நீர்நிலைகள் கண்டறியப்பட்டு மாவட்ட அரசிதழில் அறிவிக்கை செய்யப்பட்டு, இணைய வழி வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு, இணையவழி மூலமாகவே வட்டாட்சியர்களால் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டதற்குரிய அனுமதி மட்டும் வழங்கப்பட்டு வருகிறது.
நீர்நிலைகளில் இருந்து விவசாய மற்றும் மண்பாண்ட பயன்பாட்டிற்கு வண்டல் மண், களிமண் எடுத்துச் செல்வதை உறுதிசெய்யும் வகையில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு நாளிதழ்களில் செய்தி வெளியிடப்பட்டதற்கிணங்க. வட்டாட்சியரால் வழங்கப்படும் இணையவழி அனுமதியுடன் மாவட்ட ஆட்சியரால் நிர்ணயம் செய்துள்ள தொடர்புடைய ஏரியின் நீர்வளத்துறை அல்லது ஊரக வளர்ச்சித்துறை பொறுப்பு அலுவலர்களிடம் நடைச்சீட்டும் (Trip Sheet) பெற்று பயனாளிகள் வண்டல், களிமண், மண் எடுத்துச் செல்ல வேண்டுமென மீண்டும் நினைவுபடுத்தப்படுகிறது.
நீர்நிலைகளில் இருந்து விவசாயப் பயன்பாட்டிற்கு வண்டல் மண், களிமண் எடுத்துச் செல்வதற்கு ஏற்கனவே தெரிவித்துள்ளபடி, வட்டாட்சியரின் அனுமதி பெற்று நீர்வளத் துறை / ஊரக வளர்ச்சித் துறை பொறுப்பு அலுவலர்களால் குறியீடு செய்து காட்டப்படும் பகுதியில் மட்டும் குறிப்பிட்ட ஆழத்திற்கு மிகாமல் அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டுமே மண் எடுத்துச்செல்ல வேண்டும். மேலும், நீர்நிலைகளில் வண்டல். களிமண் எடுப்பதற்கு வட்டாட்சியரால் வழங்கப்படுவது ஆவண சரிபார்ப்புக்கான ஒப்புதல் அனுமதி மட்டுமே என்பதால் இத்திட்டம் உரிய முறையில் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்யும் வகையில் மேற்குறிப்பிடப்பட்டுள்ள அலுவலர்களிடம் நடைச்சீட்டு (Trip Sheet) பெற்று மட்டுமே நீர்நிலைகளில் இருந்து விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் வண்டல் மண் எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.