தமிழ் புதல்வன் திட்டத்தை செயல்படுத்த ரூ.401 கோடி நிதி ஒதுக்கீடு - அரசாணை வெளியீடு
உயர்கல்வி பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என தமிழக அரசு சட்டமன்றத்தில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த திட்டத்திற்காக தமிழக அரசு 401.47 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
இதுகுறித்து வெளியான அரசாணையில், முதல்கட்டமாக 3.28 லட்சம் மாணவர்கள் தமிழ்ப் புதல்வர் திட்டத்தில் பயன்பெறவுள்ள நிலையில், ரூ. 401.47 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்கள் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்றிருக்க வேண்டும். ஆதார் எண் கட்டாயம். ஏற்கெனவே அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டம் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Read more ; 3 நாட்களில் ரூ.3,040 வரை குறைந்த தங்கம் விலை..!! நகைக்கடைக்கு படையெடுக்கும் மக்கள்..!!