For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

BJP கூட்டணியில் அமமுகவுக்கு 2 தொகுதிகளில் ஒதுக்கீடு..!! தினகரன் எங்கு போட்டி..?

04:16 PM Mar 20, 2024 IST | 1newsnationuser6
bjp கூட்டணியில் அமமுகவுக்கு 2 தொகுதிகளில் ஒதுக்கீடு     தினகரன் எங்கு போட்டி
Advertisement

பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அண்ணாமலை மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், "நாங்கள் கேட்ட தொகுதிகளை கொடுத்துள்ளனர். எந்தெந்த தொகுதிகள் என்பதை பாஜக தலைமை அறிவிக்கும். நான் போட்டியிடுவது தொடர்பாக இன்னும் முடிவு செய்யப்படவில்லை. பாஜக தலைமை தொகுதிகளை அறிவித்த பின் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்.

குக்கர் சின்னம் கேட்டு விண்ணப்பித்துள்ளோம். திராவிட இயக்கங்களை ஒழிப்போம் என்று பாஜக தலைவர்கள் சொல்வது திமுக, அதிமுகவை தான். ஜெயலலிதா திராவிட பாரம்பரியத்தின் பரிணாம வளர்ச்சி. இங்கு பிறந்தவர்கள் எல்லாம் திராவிடர்கள்தான். அதில் மாற்று கருத்து இல்லை. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் புதிய சாதனை படைப்பார்கள். நான் தேனியில் போட்டியிட வேண்டும் என்று நீண்ட நாளாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த முறை அங்கு போட்டியிடுவது தொடர்பாக வாய்ப்பு இருந்தால் பார்ப்போம்" என்று தெரிவித்தார்.

Read More : பிரபல நடிகை கவலைக்கிடம்..!! நிதியுதவி கேட்டும் முன்வராத திரையுலகினர்..!! மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்..!!

Advertisement