முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

லோக்சபா தேர்தலில் இவர்களுடன் தான் கூட்டணி..!! அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஓபிஎஸ்..!!

07:13 AM Jan 04, 2024 IST | 1newsnationuser6
Advertisement

நாடாளுமன்ற தேர்தலில் அமமுக உடன் இணைந்து தேர்தலை சந்திப்போம் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

சென்னை திருவான்மியூரில் ஆதரவாளர்களுடன் ஆலோசனைக்கு பின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த கூட்டத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்தியலிங்கம் கு.ப கிருஷ்ணன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது ஓ.பன்னீர்செல்வம், திருச்சியில் பிரதமரை சந்தித்தது தொடர்பாக விளக்கம் அளித்தார்.

ஓபிஎஸ் கூறுகையில், மரியாதை நிமித்தமாகவே பிரதமர் சந்தித்தேன். பிரதமரை சந்தித்தபோது அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன் என்றார். தொடர்ந்து பேசிய அவர், அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து இபிஎஸ் விலகும் வரை யுத்தம் தொடரும். நாடாளுமன்ற தேர்தலில் அமமுக உடன் இணைந்து தேர்தலை சந்திப்போம். நாடாளுமன்ற தேர்தலில் அமமுக, பாஜகவுடன் இணைந்து பணியாற்றும் சூழல் உள்ளது.

சசிகலாவை தரக்குறைவாக பேசி இபிஎஸ் நம்பிக்கை துரோகம் செய்துள்ளார். காலம் வரும்போது இபிஎஸ் தொடர்பான ரகசியங்களை வெளியிடுவேன். இபிஎஸ் குறித்த ரகசியங்கள் உரியவரிடம் தெரிவிக்கப்படும். எம்ஜிஆர் வகுத்த அதிமுக விதிகளை கல்நெஞ்சம் படைத்தவர்கள் ரத்து செய்துள்ளனர். மீண்டும் மூன்றாவது முறையாக நாட்டினுடைய பிரதமராக மோடி ஜி வருவார் என தெரிவித்துள்ளார்.

Tags :
ஓ.பன்னீர்செல்வம்சென்னைநாடாளுமன்ற தேர்தல்பிரதமர் மோடி
Advertisement
Next Article