மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தை..? பாஜகவுக்கு செக் வைத்த எடப்பாடி..!! தேசிய அரசியலுக்கு செல்கிறார் அண்ணாமலை..?
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பாஜக மேலிடம், கட்டாய ஓய்வு கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரும் செப்டம்பர் மாதம் லண்டன் செல்கிறார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சார்பில் சர்வதேச அரசியல் படிப்புக்காக இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 12 பேரில் அண்ணாமலையும் ஒருவர். இதற்காக, 6 மாதங்கள் அண்ணாமலை லண்டனில் தங்குகிறார். லண்டன் செல்ல அனுமதி கேட்டு பாஜக மேலிடத்திற்கு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பாஜக - அதிமுக மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாகவும், கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி வைக்கும் நிபந்தனைகளில் அண்ணாமலையை நீக்க வேண்டும் என்பதும் ஒன்று எனக் கூறப்படுகிறது. இதற்கு பிடி கொடுக்காத பாஜக, லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிக்க 6 மாத காலம் அனுப்பி, அண்ணாமலைக்கு ஓய்வு கொடுக்கவும், பிறகு நாடு திரும்பியதும் தேசிய அரசியலுக்கு அழைக்க திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக,உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழிசை சௌந்தரராஜன் சந்தித்து பேசினார். அவர்கள் சந்திப்பின் போது என்ன பேசினார்கள் என்று தெரியவில்லை. இதனால், தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் தமிழிசையாக இருக்கலாம் என்றும் ஒரு தகவல் பரவி வருகிறது. மற்றொரு புறம், அண்ணாமலையின் ஆதரவாளர்கள் அந்த கருத்தை மறுத்து வருகின்றனர்.