நோட்...! அனைத்து சுற்றுலா வாகனங்களை இணையதளத்தில் கட்டாயம் பதிவு செய்திட வேண்டும்...!
சேலம் மாவட்டத்தில் சுற்றுலா தொழில் நடத்துபவர்கள் சுற்றுலா இணையதளத்தில் கட்டாயம் பதிவு செய்திட வேண்டும்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறையின் சார்பில் "சுற்றுலா வழிகாட்டிகள் (Tour Guides), சுற்றுலா பயணம் ஏற்பாட்டாளர்கள் (Tour Agents), சுற்றுலா முகவர்கள் )Travel Agents) சுற்றுலா போக்குவரத்து துறை ஏற்பாட்டளர்கள் (Tourist Transport Operators)" ஆகியவற்றை நடத்தும் நிறுவனங்கள் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகளின்படி சுற்றுலாத்துறை இணையதளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசாணைகளும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, சேலம் மாவட்டத்தில் செயல்படும் சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் சுற்றுலா பயணம் ஏற்பாடுச் செய்பவர்கள் சுற்றுலா முகவர்கள் மற்றும் சுற்றுலா போக்குவரத்து ஏற்பாட்டாளர்கள் நடத்தும் நிறுவனங்கள் சுற்றுலாத்துறை இணையதளமான https://www.tntourismtors.com என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும், விவரங்களுக்கு சேலம், மாவட்ட ஆட்சியரகம், இரண்டாம் தளத்தில் செயல்பட்டுவரும் சுற்றுலா அலுவலகத்தை 89398 96397, 0427-2416449 என்ற தொலைபேசி எண்ணிலும், touristofficesim@gmail.com எனற முகவரியிலும் தொடர்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.