இதெல்லாம் நமக்கு சரியா வராது!. கழட்டிவிட்ட விஜய்!. இலை பக்கம் சாய்ந்த சீமான்!. கூட்டணி கனவு பலிக்குமா?
Vijay - Seeman: விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதில் பாமக, நாம் தமிழர், திமுக போட்டியிடுகின்றனர். இங்கே மும்முனை போட்டி நிலவும் நிலையில், அதிமுக ஆதரவை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுள்ளார். நம்முடைய பொது எதிரி திமுக. அப்படிப்பட்ட பொது எதிரியை வீழ்த்த வேண்டும் என்று பிரச்சாரம் செய்கிறோம். திமுக என்ற நச்சுமரத்தை வீழ்த்த வேண்டும் . அதற்கு எளிய பிள்ளைகள் எங்களை ஆதரித்து எங்களுடன் நில்லுங்கள். நான் உங்களுக்கு நின்று உள்ளேன்.
இந்த ஒரு தேர்தல் நீங்கள் எங்களுக்கு ஆதரவு கொடுங்கள். அதிமுக இந்த தேர்தலில் நிற்கவில்லை. அப்படி இருக்க அதிமுக எங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். அதிமுகவின் ஆதரவு எங்களுக்கு கொடுக்கலாம். எங்களின் வேட்பாளர் அபிநயாவிற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும் சீமான் வெளிப்படையாகவே பேசியிருக்கிறார்.
இந்நிலையில், நடிகர் விஜயிடம் கூட்டணி தொடர்பாக அதிமுக ரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக அரசியல் வட்டாரத்தில் ஒரு பேச்சு எழுந்துள்ளது. முக்கியமாக 2026 சட்டசபை தேர்தலை மனதில் வைத்து அதிமுக ரகசியமாக காய்களை நகர்த்தி வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்துள்ளன. அதிமுகவில் விஜய்க்கு கொஞ்சம் நெருக்கமாக, அன்பாக இருக்கும் மாஜிக்கள் மூலம் இதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இப்படியிருக்கையில், மாணவர்கள் மத்தியில் பேசிய விஜய், 'ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் வரும் செய்திகள் உண்மை இல்லை. செய்தி வேறு கருத்து வேறு' என்று பஞ்ச் பேசியிருக்கிறார். அது சீமான் கூட்டணிக்கான கூடச் சொல்லி இருக்கலாம். ஆனால், 2026இல் சீமானுடன் கூட்டணி இல்லை என்பதை விஜய் அவரிடம் விளக்கி விட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
சீமானை அழைத்துக் கொண்டு லாங் டிரைவ் சென்ற விஜய், தனது பலத்தை அறிந்துகொள்வதற்காக தனித்தே போட்டியிட உள்ளதாக விளக்கம் அளித்துவிட்டார் என்றும் தகவல் கசிந்துள்ளது. ஆகவேதான், சீமான் இப்போது அதிமுக பக்கம் நெருங்க ஆரம்பித்திருக்கிறார். அப்படியே விஜய் வந்தால் சேர்ந்து கொள்ளலாம். இல்லை எனில் இலை பக்கம் இன்பமாகக் கூட்டணி வைத்துவிடலாம் என்று திட்டம் தீட்டி உள்ளதாகச் சொல்லப்படுகிறது.
Readmore: பலே பிளான்!. பெண்களுக்கு மாதம் ரூ.1,500!. 3 இலவச சிலிண்டர்!. பட்ஜெட்டில் தாராளம் காட்டிய அரசு!