For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

”இதெல்லாம் சர்வசாதாரணமா நடக்குது”..!! ”தமிழ்நாட்டை அச்சநிலைக்கு தள்ளிய ஸ்டாலின் மாடல் அரசு”..!! பொங்கி எழுந்த எடப்பாடி பழனிசாமி..!!

The news that a student who went to drink tea at the IIT Chennai canteen was sexually harassed is shocking.
07:48 AM Jan 16, 2025 IST | Chella
”இதெல்லாம் சர்வசாதாரணமா நடக்குது”     ”தமிழ்நாட்டை அச்சநிலைக்கு தள்ளிய ஸ்டாலின் மாடல் அரசு”     பொங்கி எழுந்த எடப்பாடி பழனிசாமி
Advertisement

சென்னை ஐஐடி மாணவி ஒருவர் அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வரும் நிலையில், வளாகத்திற்கு வெளியே சென்று மாணவி தேநீர் குடிக்க சென்றுள்ளார். அப்போது, பேக்கரியில் பணியாற்றும் ஊழியர் ஸ்ரீராம் (30) மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து, மாணவி அளித்த புகாரின் பேரில், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஸ்ரீராமை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள சென்னை ஐஐடி, ”மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை, அந்த மாணவியின் நண்பர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் ஐஐடி வளாகத்திற்கு வெளியே தேனீர் கடையில் நடந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு சென்னை ஐஐடியுடன் எந்த தொடர்பும் இல்லை. மாணவ - மாணவிகள் வளாகத்தை விட்டு வெளியே செல்லும் போது முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு அரசுக்கும், ஐஐடி நிர்வாகத்துக்கும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”சென்னை ஐஐடி கேன்டீனில் தேநீர் குடிக்கச் சென்ற மாணவி, பாலியல் தொல்லைக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யாத சென்னை ஐஐடி நிர்வாகத்திற்கும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சர்வசாதாரணமாக நடக்கும் அச்ச நிலைக்கு தமிழ்நாட்டைத் தள்ளிய மு.க.ஸ்டாலின் மாடல் அரசுக்கும் எனது கடும் கண்டனம்.

பெண்கள் கல்வியே சமூகத்தை உயர்த்தும். அவர்கள் அதைப் பெறுவதற்கான பாதுகாப்பான சூழலை அமைக்க வேண்டியது தங்கள் தலையாயக் கடமை என்பதை மத்திய - மாநில அரசுகளும், கல்லூரி நிர்வாகங்களும் உணர வேண்டும். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவன் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், இனியேனும் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை தமிழ்நாட்டில் அமைத்திடுமாறு ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Read More : அண்ணாமலையின் ஆட்டம் முடிகிறதா..? அடுத்த பாஜக தலைவர் இவரா..? வெளியாகிறது அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

Tags :
Advertisement