இன்றுமுதல் இதெல்லாம் மாறபோகிறது!… மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் சூழலா?
மத்திய மாநில அரசுகள் அவ்வப்போது தங்கள் கொள்கை விதிகளை மாற்றி அமைக்கின்றன. பொதுமக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்க, பல்வேறு துறைகளின் செயல்திறனை மேம்படுத்த புதிய விதிகள் மற்றும் விதிமுறைகளை மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்துவது வழக்கம். அந்த வகையில் (பிப்ரவரி 1) இன்றுமுதல் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட உள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
Google மற்றும் Yahoo கணக்குகள் மூலம் மொத்த மின்னஞ்சல் அனுப்பும் செயல்முறை பிப்ரவரி 1ம் தேதி முதல் மாறுகிறது. இது ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 5000 மின்னஞ்சல்களை அனுப்பும் டொமைன்களை பாதிக்கிறது. அதிக எண்ணிக்கையிலான அஞ்சல்களை தொடர்ந்து அனுப்ப, DMARC தரநிலைகளை பின்பற்ற வேண்டும். DMARC என்பது டொமைன் அடிப்படையிலான அங்கீகாரம். இது மின்னஞ்சல்கள் உண்மயானவை, ஸ்பேம் அல்லாதவை என்பதை உறுதிப்படுத்தும் அம்சமாகும்.
மொத்தமாக மின்னஞ்சல் அனுப்புபவர்கள் 0.3 சதவீதத்திற்கும் குறைவாக ஸ்பேம் வைத்திருக்க வேண்டும். உரிய மின்னஞ்சல்களுக்கு மட்டும் அனுப்புவதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த புதிய விதிகள் பின்பற்றப்பட்டால் நீங்கள் மொத்தமாக அனுப்பும் மின்னஞ்சல்கள் நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
NPS திரும்ப பெறுதல் மாற்றங்கள் : ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (PFRDA) வழிகாட்டுதல்களின்படி தேசிய ஓய்வூதிய அமைப்பிலிருந்து (NPS) பணம் எடுப்பதற்கான விதிகள் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட உள்ளது. டிசம்பர் 2023-ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மாற்றங்கள் NPS சந்தாதாரர்களுக்கு அதிக பயனளிக்கும்.
புதிய விதிகளின்படி NPS சந்தாதாரர்கள் பல்வேறு தனிப்பட்ட தேவைகளுக்காக தங்கள் ஓய்வூதிய கணக்கிலிருந்து பகுதியளவு தொகையை எடுக்கலாம். சட்டப்படி தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள், திருமணச் செலவுகள் உள்ளிட்ட குழந்தைகளின் உயர்கல்விச் செலவுகளுக்காகத் தொகையை திரும்ப பெறலாம். கூடுதலாக வீடு அல்லது பிளாட் வாங்கவோ அல்லது கட்டவோ நிதியை பெறலாம்.
தேசிய பென்சன் திட்டத்தில் (NPS) மிகப் பெரிய மாற்றம் வருகிறது. இன்று முதல் தேசிய பென்சன் திட்டத்தின் விதிமுறை மாற்றப்படுகிறது. பென்சன் நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள உத்தரவின் படி இனி தேசிய பென்சன் திட்ட கணக்கில் இருந்து 25 சதவீதத்திற்கும் அதிகமான தொகையை எடுக்க முடியாது. ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படுவது வழக்கம்.
சுங்க சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்கான, FASTag பயன்படுத்துவோர், தங்களது சுயவிபரங்களை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நேற்றுடன்(ஜனவரி 31) முடிவடைந்த நிலையில், அதனை பிப்ரவரி 29ம் தேதிவரை நீட்டித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.
வாடிக்கையாளர்கள் இனி IMPS முறையில் பணப் பரிவர்த்தனை செய்யும் போது இந்த விதிமுறையைக் கடைபிடித்தே ஆகவேண்டும். பிப்ரவரி 1ஆம் தேதி முதல் IMPS முறையில் பணம் அனுப்பும்போது ரூ. 5 லட்சத்துக்கு மேல் அனுப்பினால் அதற்கு பயனாளியின் பெயரை சேர்க்க வேண்டும். ரிசர்வ் வங்கி வெளியிடும் தங்க முதலீட்டுப் பத்திரத்துக்கான அடுத்த கட்ட வெளியீடு பிப்ரவரி மாதம் அறிவிக்கப்படும். பிப்ரவரி 12ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 16ஆம் தேதி வரை தங்க முதலீட்டுப் பத்திரங்களை வாங்கலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
பிப்ரவரி மாத தொடக்கத்தில் ரயில்வே கால அட்டவணையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. இதனால் பயணிகளின் ரயில் சேவையில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரக்கு ரயில்கள் மற்றும் சில பயணிகள் ரயில்களின் கால் அட்டவணையில் ரயில்வே துறை மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த புதிய அட்டவணைப்படி ரயில்வே போக்குவரத்து நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி மாதத்தில் இருந்து வங்கிக் கடன் வட்டி விகிதம் அதிகரிக்கும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மத்திய ரிசர்வ் வங்கியின் ரெப்கோ விகிதம் சமீபத்தில் அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து வங்கிகளும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை அதிகரிப்பது தொடர்பாக ஆலோசனை செய்து வருகின்றன. 2024 ஆம் வருட பட்ஜெட் தாக்களுக்கு பிறகு ரெப்கோ விகிதம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் வங்கிகளில் கடன் வாங்குபவர்களுக்கு அதிக வட்டி விகிதம் விதிக்கப்படும். மேலும் வங்கிக் கடனை திருப்பி செலுத்துவதற்கு அதிக காலம் எடுக்கும்.
ஆதார் கார்டு போலவே பான் கார்டு விநியோகிப்பதிலும் புதிய கட்டுப்பாடுகளையும் மாற்றங்களையும் கொண்டு வர மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்து இருக்கிறது. தற்போது பான் கார்டுகள் தனியார் நிறுவனங்கள் முதல் சிறிய சேவை மையங்களிலும் விண்ணப்பித்து பெறக்கூடிய வகையில் அதன் விதிமுறைகள் இருக்கிறது. பட்ஜெட்டிற்கு பிறகு இதில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளது. ஆதார் கார்டு போலவே பான் கார்டு எடுப்பதற்கும் சிறப்பு மையங்கள் அமைக்கப்படும். மேலும் தனியார் நிறுவனங்களிடம் இருக்கும் பான் கார்டு விண்ணப்பிக்கும் முறை ரத்து செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சமையல் கேஸ் சிலிண்டர் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றி அமைத்து வருகின்றன. வர்த்தக கேஸ் சிலிண்டரை பொறுத்தவரையில் ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை இன்று மாற்றி அமைக்கப்பட்டது. சென்னையில் வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.12.5 உயர்ந்து ரூ.1,937க்கு விற்பனையாகவுள்ளது. சென்னையில் நேற்றுவரை ரூ.1924.50 என்று விற்பனை செய்யப்பட்டு வந்த வர்த்தக சிலிண்டர்கள் இன்று முதல் ரூ.1,937க்கு விற்பனை செய்யப்படவுள்ளது. அதேவேளை வீடுகளில் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டரின் விலையில் எந்தவிதமான மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அதாவது வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலை மாற்றமின்றி ரூ.918.50க்கு விற்பனை ஆகிறது.