இவர்கள் எல்லாம் தவறுதலாக கூட நெல்லிக்காய் சாப்பிடக் கூடாது.. ஆபத்தாக மாறும்..!
நெல்லிக்காய் என்பது பல்வேறு ஊட்டச்சத்துக்கள், மருத்துவ குணம் கொண்ட பழங்களில் ஒன்றாகும். வைட்டமின் சி நிறைந்துள்ள இந்த நெல்லிக்காயில் இரும்பு, கால்சியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளளன.
நெல்லிக்காயில் வைட்டமின் சி நோயெதிர்ப்பு மண்டலத்தை அதிகரிப்பதற்கும், ஆரோக்கியமான சருமத்திற்கான கொலாஜன் தொகுப்பை மேம்படுத்துவதற்கும், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராடுவதற்கு உதவுகிறது. வைட்டமின் சி தோல் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. எனவே நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிடுவதால் பளபளப்பான சருமம் கிடைக்கும்.
நெல்லிக்காய் இரைப்பைச் சாறுகளின் சுரப்பைத் தூண்டி, சிறந்த ஊட்டச்சத்து உறிஞ்சுதலை ஊக்குவிக்கிறது. இதனால், அஜீரணம், அமிலத்தன்மை மற்றும் மலச்சிக்கல் தொடர்பான அறிகுறிகளைக் குறைப்பதன் மூலம் செரிமானத்தை மேம்படுத்துகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
தினமும் நெல்லிக்காய் சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவும். இது பெருந்தமனி தடிப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற இருதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க வழிவகுக்கும். நெல்லிக்காயில் கெட்ட கொழுப்பை கரைக்கும் பண்புகள் உள்ளன.
நெல்லிக்காய் ரத்த சர்க்கரையின் அளவை குறைக்கவும் உதவுகிறது. எனவே நீரழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த நெல்லிக்காய் ஒரு சிறந்த தீர்வாகும். சூப்பர்ஃபுட் என்று அழைக்கப்படும் இந்த நெல்லிக்காய் உடலில் இரும்பு அளவை நிரப்புவதற்கும் உதவுகிறது..
நெல்லிக்காயை தொடர்ந்து உட்கொள்வதால் முடி ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது. இதனால் தலைமுடியை அடர்த்தியாகவும் ஆரோக்கியமாகவும் வளர உதவுகிறது.. மேலும் உடலில் இரும்பை நிரப்ப உதவுகிறது, இதன் மூலம் ஒட்டுமொத்த ஆற்றல் நிலைகளை அதிகரிக்க நெல்லிக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.. நெல்லிக்காயில் கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன.
நெல்லிக்காய் உட்கொள்வதால் ஏற்படும் ஆபத்துகள்: நெல்லிக்காயானது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் அதே வேளையில், அதிகப்படியான நுகர்வு சில பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும். வயிற்றுப்போக்கு அல்லது வயிற்று அசௌகரியம் போன்ற செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம். மேலும், நெல்லிக்காயின் அதிக அமிலத்தன்மை சிலருக்கு அமில ரிஃப்ளக்ஸ் அல்லது நெஞ்செரிச்சலை அதிகரிக்கலாம். நெல்லிக்காய்க்கு ஒவ்வாமை உள்ளவர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மேலும் சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் நெல்லிக்காயை சாப்பிடக்கூடாது. இதில் அதிக அளவு வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் இருப்பதால் அதை தவிர்க்க வேண்டும். அதே போல் தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் தைராய்டு செயல்பாட்டில் குறுக்கிடக்கூடிய நெல்லிக்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் அறுவை சிகிச்சைக்கு முன்னும் பின்னும் நெல்லிக்காய் அல்லது நெல்லிக்காய் சாறு உட்கொள்வதைத் தவிர்க்கவும், ஏனெனில் இது இரத்தப்போக்கு அபாயத்தை அதிகரிக்கும். பாதகமான எதிர்விளைவுகளைத் தவிர்க்கவும், இந்த பழத்தின் நன்மைகளை அதிகரிக்கவும் மிதமான அளவில் நெல்லிக்காயை உட்கொள்வது நல்லது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.