இவர்களெல்லாம் பூண்டு சாப்பிடக் கூடாது..? பக்கவிளைவுகளை தெரிஞ்சுக்கோங்க..
தினசரி சமையலில் பயன்படுத்தப்படும் பூண்டு மருத்துவ குணம் மிக்கது. அதேசமயம் பூண்டை சிலர் உணவில் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது நன்மை பயக்கும். யாரெல்லாம் பூண்டு சேர்க்கக்கூடாது என பார்க்கலாம்.
பூண்டு நம் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும், அதை தினமும் பயன்படுத்த வேண்டும். ஆனால் இது பல நோய்களுக்கும் தீங்கு விளைவிக்கும் என்பதை நிரூபிக்கிறது. இரத்த அழுத்த நோயாளிகள் இதைப் பயன்படுத்தக்கூடாது. சில நோய்களில் பூண்டு உட்கொள்வதும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். சில உடல் பிரச்சினைகள் உள்ளவர்கள் கட்டாயம் பூண்டு உட்கொள்ளக் கூடாது.
பூண்டில் உள்ள அலிசின் கல்லீரல் நச்சை அதிகரிக்கும். இதனால் கல்லீரல் பிரச்சினை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும் வயிற்றுப் பிரச்சினை ஏதேனும் இருந்தால், பூண்டு சாப்பிடுவதைத் தவிர்க்கவும். இது வயிற்றுப்போக்கு, வயிற்றுப் புண் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.. குறைந்த இரத்த அழுத்த பிரச்சினைகள் உள்ளவர்கள் தங்கள் உணவில் பூண்டு பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் இரத்த அழுத்தத்தை குறைக்க பூண்டு உதவுகிறது. இது குறைந்த இரத்த அழுத்த நோயாளிகளுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
பூண்டில் உள்ள சல்பர் காரணமாக அதிகமாக சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் ஏற்படலாம். பச்சை பூண்டை சாப்பிடுவதால் சிலருக்கு தலைவலி ஏற்பட்டும் வாய்ப்பு உள்ளது. அலர்ஜி உள்ளவர்கள் பூண்டு சாப்பிடுவதால் தோல் அரிப்பு, தடிப்பு உண்டாகும் வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியமான உடலில் இரத்தத்தில் ஹீமோகுளோபின் இருப்பது மிகவும் முக்கியம். ஆனால் இரத்தத்தில் குறைந்த அளவு ஹீமோகுளோபின் உள்ளவர்கள் பூண்டு உட்கொள்ளக்கூடாது, ஏனெனில் இது இரத்த சோகையை ஏற்படுத்தும். கல்லீரல் தொடர்பான ஏதேனும் சிக்கல் இருந்தால், பூண்டு உட்கொள்ளக்கூடாது. இதனால் கல்லீரல் முற்றிலுமாக சேதமடைகிறது.
Read more ; பட்டா மாறுதல்.. நிலஅளவை.. தமிழ்நிலம் செயலியில் இவ்வளவு விஷயம் இருக்கா? இனி வேலை ரொம்ப ஈஸி..