”கூட்டத்திற்கு வந்தவர்களின் வாக்குகள் எல்லாம் ஓட்டாக மாறாது..!! ”விஜய் ரசிகர்களே எனக்குத்தான் வாக்களிப்பார்கள்”..!! சீமான் பரபரப்பு பேட்டி..!!
தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் திமுக பற்றி விஜய் மறைமுகமாக பேசுகையில், யார் அரசியலுக்கு வந்தாலும் இவர்கள் கலர் பூசுகிறார்கள். நீ பாசிசம்.. நீ அது.. நீ இது என்று கலர் அடிக்கிறார்கள். எனக்கு கலர் அடிக்க முடியாது. அவர்கள் பாசிசம் பேசுகிறார்கள் என்றால், நீங்கள் என்ன பேசுகிறீர்கள். நீங்கள் என்ன பாயாசமா பேசுகிறீர்கள். மக்கள் விரோத ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என சொல்லி மக்களை ஏமாத்துறீங்க.
திராவிட மாடல் என சொல்லிக்கொண்டு ஒரு குடும்ப சுய நலக்கூட்டம் தான் எங்களின் அரசியல் எதிரி. ஆபாசம், அள்ளு சில்லு எல்லாம் வச்சு அவதூறு பரப்பி இந்த படையை வீழ்த்தலாம்னு கனவுல கூட நினைச்சுறாதிங்க என்று கூறினார். விஜய்யின் பேச்சு காரணமாக அவர் எங்கே அதிமுக, நாம் தமிழர் வாக்குகளுக்கு குறி வைக்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. திமுக இங்கேயும், பாஜக மத்தியிலும் ஆட்சியிலும் உள்ளது. இவர்களை மட்டுமே எதிர்க்கலாம் என்று விஜய் நினைக்கலாம். அதிமுக - எடப்பாடி இப்போது ஆக்டிவாக பெரிதாக அரசியல் செய்வது இல்லை. வரிசையாக 11 தேர்தல்களில் அந்த கட்சி தோல்வி அடைந்துள்ளது. இதனால் அவர்களை தவிர்த்து இருக்கலாம்.
அதேபோல் திமுகவை எதிர்ப்பதன் மூலமும் மூவேந்தர்கள் படத்தை பயன்படுவதன் மூலமும் விஜய் நாம் தமிழர் வாக்குகளையும் குறி வைக்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுக, நாம் தமிழரின் இடத்தை நிரப்பி, திமுகவுக்கு எதிராக 2ஆம் இடத்தை பிடிக்க விஜய் நினைக்கலாம் என்று அரசியல் வாதங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான், தமிழக வெற்றிக் கழகத்தாலும், விஜய்யின் அரசியல் வருகையாலும் எனது வாக்குகள் குறையாது என்று தேனியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்துள்ளார்.
எம்.ஜி.ஆர்., ரஜினி, கமல், விஜய் உள்ளிட்டோர் அரசியல் கட்சி தொடங்கும் போது ரசிகர்களை சந்தித்துதான் வந்தனர். ஆனால், திரைத்துறையில் இருந்து வந்த நான், மக்களை சந்தித்துதான் அரசியலுக்கே வந்தேன். ஒரு நடிகரைப் பார்க்க கூட்டம் அதிகளவு வரும். ஆனால், கூட்டத்தில் வந்தவர்களின் வாக்குகள் எல்லாம் கிடைக்கும் என்பதில் சந்தேகமே. விஜய்யின் வருகையால் எனது வாக்குகள் குறையாது. விஜய் ரசிகர்கள் சிலரும் எனக்குத்தான் வாக்களிப்பார்கள்” என்று தெரிவித்தார்.