For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தமிழகம் முழுவதுமே காலை 11 மணி முதல்...! இந்த முறை கிராம சபையில் இதுவும் கட்டாயம்...! அரசு அதிரடி...

06:00 AM Jan 26, 2024 IST | 1newsnationuser2
தமிழகம் முழுவதுமே காலை 11 மணி முதல்     இந்த முறை கிராம சபையில் இதுவும் கட்டாயம்     அரசு அதிரடி
Advertisement

குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இன்று கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளது.

மத்திய ஆணைகளின்படி, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இன்று கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல். மக்கள் திட்டமிடல் இயக்கம் (people’s plan campaign) மூலம் (2024-25) ஆம் நிதியாண்டிற்கான கிராம வளர்ச்சி திட்டம் குறித்து விவாதிக்கப்படவுள்ளன.

Advertisement

மேலும், தூய்மை பாரத இயக்கம் (பாரதம்), குடிநீர் இயக்கம், கனவுப்பள்ளிகள், ஊரக விளையாட்டு மைதானம், சீமைக்கருவேல மரம் அகற்றுதல், நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றுதல், ஊராட்சியின் சிறப்பு பிரச்சனைகள் அல்லது தேவைகள், கல்வி அறிவு / பெண் கல்வியறிவு சதவீதம், ஆண்/பெண் குழந்தை பிறப்பு விகிதம், போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி, முதலமைச்சரின் காலை உணவு திட்டம், பசுமை தமிழ்நாடு இயக்க திட்டம் மற்றும் அரசின் பிற முக்கிய திட்டங்கள் குறித்த விவரங்கள் பொதுமக்கள் மத்தியில் விவாதிக்கப்படவுள்ளது.

பள்ளிக்கல்வி சார்பில், அதிகாரிகள் அல்லது உள்ளூர் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கட்டாயம் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஊராட்சி பகுதிகளில், அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவது, கட்டமைப்பை உருவாக்குவது, மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது, பள்ளி வளாக துாய்மை பணிகள் போன்றவை குறித்து, ஆசிரியர்கள் பேச வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags :
Advertisement