முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

News Alert: பொங்கல் பரிசு 1,000 ரூபாய் யாருக்கெல்லாம் கிடைக்கும்.? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்.!

02:06 PM Jan 09, 2024 IST | 1newsnationuser7
Advertisement

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும். இந்தப் பண்டிகை ஜனவரி மாதம் 14ஆம் தேதி முதல் தமிழகத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்தப் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்கு தமிழக மக்களுக்கு ஒவ்வொரு வருடமும் அரசு சார்பாக உங்கள் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

Advertisement

இந்த வருடத்திற்கான பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பொங்கல் பரிசு 1,000 ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். மேலும் அரசு ஊழியர்கள் வருமான வரி செலுத்துபவர்கள் சர்க்கரை குடும்ப அட்டைக்காரர்கள் ஆகியோருக்கு 1,000 ரூபாய் வழங்கப்பட மாட்டாது எனவும் முந்தைய அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தார். தற்போது இது மாற்றப்பட்டு புதிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இந்த புதிய அறிவிப்பின்படி ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு 1,000 ரூபாய் வழங்கப்படும் என முக்கிய அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டு இருக்கிறார். இந்த அறிவிப்பால் தமிழக மக்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் பணத்தை பெறுவதற்கான டோக்கன் தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. நாளை முதல் உங்கள் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
1000 rupeesCM New AnnouncementEligible Ration Card Holderspongal giftTamilnadu
Advertisement
Next Article