முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ரெடி...! இன்றுடன் முடிந்த காலாண்டு விடுமுறை... தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகள் திறப்பு...!

All over Tamil Nadu schools are going to open tomorrow after the quarter holidays.
06:08 AM Oct 06, 2024 IST | Vignesh
Advertisement

தமிழகம் முழுவதும் நாளை காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கான காலாண்டுத் தேர்வு விடுமுறை இன்றுடன் முடிவடைய உள்ளது. அக்டோபர் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், காலாண்டு விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் அக்டோபர் 7ம் தேதி திங்கள்கிழமை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாளை தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

Advertisement

பள்ளிகளில் வகுப்பறைகள் உட்பட வளாகம் முழுவதும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே மாணவர்களுக்கு மதிப்பீடு செய்யப்பட்ட காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் விநியோகிக்கப்பட வேண்டும். அதேபோன்று இரண்டாம் பருவத்துக்காக பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பாட நூல்களும் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

பருவ மழையை முன்னிட்டு பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தலைமை ஆசிரியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது பல மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் மாணவர்களின் நலன் கருதி அந்த நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
holidayschoolSCHOOL REOPENtn government
Advertisement
Next Article