வந்தது அலர்ட்...!சென்னையில் உள்ள அனைத்து பூங்காக்களை மூட மாநகராட்சி உத்தரவு...!
புயல் எச்சரிக்கை திரும்ப பெறும் வரை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பூங்காக்களை மூட உத்தரவு.
தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப் பெற்றுள்ளது. இது தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் டிச. 2-ம் தேதி புயலாக வலுப்பெறும். இதனால், சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் வரும் 2, 3-ம் தேதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் நேற்று முழுவதும் வெளுத்து வாங்கிய கனமழையால் தியாகராய நகர், மாம்பலம், மந்தைவெளி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடுவதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்கள்ளும் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் புயல் எச்சரிக்கை திரும்ப பெறும் வரை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பூங்காக்களை மூட சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.