”MP, MLA என மொத்த பேரும் ஸ்பாட்டுக்கு வரணும்”..!! திமுக தலைமை போட்ட ஆர்டர்..!! பரபரப்பு..!!
திமுக ஐடி விங் சார்பில் நடத்தப்படவுள்ள சோசியல் சைட்ஸ் குறித்த பயிற்சி வகுப்பில் எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் உள்பட அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக தலைமைக்கழகம் இன்று விடுத்துள்ள அறிவிப்பில், ”திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் முன்னெடுப்பில் வரும் 13ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று மாவட்டக் கழகங்கள் நடத்தும் மாவட்ட அளவிலான "சமூக ஊடகங்களுக்கான பயிற்சி வகுப்பு" நடைபெறவுள்ளது. இதில், இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி, தொண்டர் அணி, தொழிலாளர் அணி, வழக்கறிஞர் அணி, பொறியாளர் அணி, மருத்துவ அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி, சிறுபான்மை நல உரிமைப் பிரிவு விவசாய அணி, விவசாயத் தொழிலாளர் அணி, சுற்றுச்சூழல் அணி, அயலக அணி உள்ளிட்ட கழக சார்பு அணிகள் இதில் கலந்து கொள்ள வேண்டும்.
மேலும், மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இந்த பயிற்சி வகுப்பில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இப்பயிற்சி வகுப்பு நடைபெறும் இடம் குறித்த விவரங்களைத் தெரிந்து கொள்ள, அந்தந்த மாவட்டக் கழகத்தை அணுக வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.