ALL EYES ON RAFAH : இஸ்ரேலுக்கு எதிராக சமூக வலை தளங்களில் ட்ரெண்ட் செய்யப்படும் "ஆல் ஐஸ் ஆன் ரஃபா" ஹேஷ்டேக்!!
அகதிகள் முகாமின் புகைப்படம் "All Eyes on Rafah" என்ற வாசகத்துடன் ட்ரெண்ட் ஆகியுள்ளது. கழுகுப் பார்வையில் எடுக்கப்பட்ட அந்தப் படத்தில், ஒரு அகதிகள் முகாமில் உள்ள கூடாரங்கள் "All Eyes on Rafah" என்ற வாசகத்தைக் காட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
காசா - இஸ்ரேல் போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரத்தில் தற்காலிக முகாம்கள் மீது இஸ்ரேல் படைகள் ஞாயிற்றுக்கிழமை (மே 26) குண்டு வீசி தாக்குதல் நடத்தின. இதில், பெண்கள், குழந்தைகள் உட்பட 45 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும், 249 பேர் காயமடைந்ததாகவும் காசாவில் உள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. இந்தத் தாக்குதல் உலகளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
காசா நகரில் நடைபெற்று வரும் படுகொலையைக் குறிக்கும் வகையில், “ஆல் ஐஸ் ஆன் ரஃபா” (All eyes on Rafah) என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. “ஆல் ஐஸ் ஆன் ரஃபா” என்ற ஹேஷ்டேக் உடன் பாலஸ்தீன மக்கள் குறித்து இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. இதை பல நெட்டிசன்கள் ஷேர் செய்து பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக குரலெழுப்பி வருகின்றனர்.
ரஃபாவில் பொதுமக்கள் வீடுகளை இழந்து அகதிகள் முகாம்களில் தங்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இஸ்ரேலிய ராணுவத்தின் தாக்குதல்களில் இருந்து உயிர் தப்பிய சுமார் 15 லட்சம் பேர் முகாமில் தஞ்சம் அடைந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், ஒரு அகதிகள் முகாமின் புகைப்படம் "All Eyes on Rafah" என்ற வாசகத்துடன் ட்ரெண்ட் ஆகியுள்ளது. கழுகுப் பார்வையில் எடுக்கப்பட்ட அந்தப் படத்தில், ஒரு அகதிகள் முகாமில் உள்ள கூடாரங்கள் "All Eyes on Rafah" என்ற வாசகத்தைக் காட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால், இந்த படம் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட படங்களில் ஒன்றாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. Fact Check வல்லுநரான மார்க் ஓவன் ஜோன்ஸ், இந்தப் படம் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்டது போல் தெரிகிறது, நிஜமானது போலத் தெரியவில்லை என்று கூறியுள்ளார். படத்தில் கூடாரத்தில் நிழல்கள் இயற்கைக்கு மாறான சமச்சீராக இருப்பது இது AI மூலம் உருவாக்கப்பட்ட படம் என்பதற்கான அடையாளம் என்று வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நடிகர்கள் வருண் தவான், அலி கோனி, சமந்தா ரூத் பிரபு மற்றும் த்ரிஷா, சமந்தா உட்பட இந்தியாவில் உள்ள பல பிரபலங்கள், தங்கள் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் "ஆல் ஐஸ் ஆன் ரஃபா" என்பதை பகிர்ந்துள்ளனர். இன்ஸ்ராகிராமில் இந்த ஹேஷ்டேக் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.