For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பருவமழை... இதற்கும் ஆசிரியர்கள் தான் பொறுப்பு...! அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி உத்தரவு...!

All District Primary Education Officers should ensure safety of schools during monsoon
05:54 AM Oct 18, 2024 IST | Vignesh
பருவமழை    இதற்கும் ஆசிரியர்கள் தான் பொறுப்பு     அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி உத்தரவு
Advertisement

பருவமழையின் போது பள்ளிகளின் பாதுகாப்பை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவிட்டுள்ளார்.

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் பருவமழைக் காலத்தில் பள்ளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் அனைத்துவித பள்ளிகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. அதை பின்பற்றி பருவமழையின் போது பள்ளிகளின் பாதுகாப்பை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் உறுதி செய்ய வேண்டும். மேலும், நீர்நிலைகள் நிரம்பியுள்ள இடங்களுக்கு மாணவர்கள் செல்லாமல் இருக்க பெற்றோர் மற்றும் ஆசிரியர் தகுந்த அறிவுரை வழங்க வேண்டும்.

Advertisement

இதுதவிர, பழைய கட்டிடங்களை பொதுப்பணித்துறை மூலம் அகற்றும் பணிகளை துரிதப்படுத்தி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பழைய மற்றும் பழுதடைந்துள்ள கட்டிடங்களைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதேபோல், மக்கள் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ள நிலையில், பள்ளிக் கட்டிடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதையும் பள்ளிக்கல்வித் துறையினால் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதையும் தீவிரமாக காண்காணிக்க வேண்டும். மேலும், பள்ளிகள் மற்றும் மாணவர்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Tags :
Advertisement