முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அலெர்ட்!… இன்றுதான் கடைசி!… Google Pay செயல்படாது!… காரணம் இதோ!

05:50 AM Jun 04, 2024 IST | Kokila
Advertisement

Google Pay: கூகுள் பே, பேடிஎம், போன்பே போன்ற செயலிகளை மக்கள் அதிகம் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். குறிப்பாக இந்த செயலிகள் மிகவும் பயனுள்ள வகையில் உள்ளன. இந்நிலையில் கூகுள் பே (Google Pay) செயலி ஆனது இன்றுமுதல் இயங்காது தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களைப் பார்க்கலாம்.

Advertisement

கூகுள் பே செயலி மூலம் ஒருவருக்கொருவர் பணம் பரிமாற்றம் செய்வது, கடைக்குச் சென்று வாங்கும் சிறிய ரக பொருட்களுக்கும் ஸ்கேன் செய்து பணம் வழங்கும் முறை இப்போது அதிகரித்து வருகிறது . அதுவும் நகரங்கள் முதல் துவங்கி உள்ளூர் சந்தைகள் வரை அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனையை மக்கள் ஆதரிக்கத் துவங்கியுள்ளனர்.

குறிப்பாக இந்த கூகுள் பே செயலி உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளது. இந்நிலையில் உலகம் முழுவதும் பல நாடுகளில் கூகுள் பே சேவையை ஜூன் 4ம் தேதி முதல் நிறுத்தப் போகிறது கூகுள் நிறுவனம். இதன் பிறகு ஆப் மூலம் பணம் செலுத்த முடியாது. அதாவது கடந்த 2022-ம் ஆண்டு தான் கூகுள் வாலட்(Google Wallet) அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின்பு கூகுள் பே பயனர்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது. ஆனாலும் கூகுள் பே செயலியை இன்றுமுதல் நிறுத்த உள்ளது கூகுள் நிறுவனம். குறிப்பாக இந்த செய்தி வந்தவுடன் அனைத்து பயனர்களும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, கூகுள் நிறுவனம் இந்தியாவில் கூகுள் பே சேவையை நிறுத்தப்போவதில்லை என்று தெரிவித்தது.

அமெரிக்காவில் இருக்கும் மக்கள் கூகுள் பே மூலம் பணம் அனுப்பவோ, பணம் பெறவோ முடியாது என்று தான் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது 180 நாடுகளில் பயனர்கள் கூகுள் பே செயலிக்கு பதிலாக கூகுள் வாலட் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். மேலும் கூகுள் நிறுவனம் அனைத்து அமெரிக்க பயனர்களையும் கூகுள் வாலட்டுக்கு மாற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. கூகுள் வாலட்டை விளம்பரப்படுத்தவே இந்நிறுவனம் இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது.

மேலும் சில வாரங்களுக்கு முன்பு தான் இந்தியாவில் கூகுள் வாலட் ஆப் (Google Wallet App)வசதியை அறிமுகம் செய்தது கூகுள். குறிப்பாக டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள், லாயல்டி கார்டுகள், கிஃப்ட் கார்டுகள் போன்றவற்றைச் சேமிக்க அனுமதிக்கிறது கூகுள் வாலட் ஆப். கூகுள் வாலட் ஆப் வசதியில் பின் பாதுகாப்பு (PIN protection) மற்றும் தொலைந்த போன அல்லது திருடப்பட்ட டிவைஸில் உள்ள சேவையைத் தொலைவிலிருந்தே முடக்கும் திறன் (Remotely disable the service) உள்ளிட்ட சிறப்பான அம்சங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Readmore: தொங்கு நாடாளுமன்றம் என்றால் என்ன? தொங்கு நாடாளுமன்றம் அமைந்தால் என்னவெல்லாம் நடக்கும்?

Tags :
google paySHUTDOWNtoday last day
Advertisement
Next Article