For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Rain: மக்களே அலர்ட்!… சட்டென்று மாறிய வானிலை!… அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை!... எந்தெந்த மாவட்டம் தெரியுமா?

07:32 AM Mar 22, 2024 IST | 1newsnationuser3
rain  மக்களே அலர்ட் … சட்டென்று மாறிய வானிலை … அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை     எந்தெந்த மாவட்டம் தெரியுமா
Advertisement

Rain: தமிழகத்தின் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் மிதமாக பெய்ய மழையினால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருவதால் மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி எடுத்தது. கோடைக்காலம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே வெயில் சுட்டெரிக்க தொடங்கியதால், இந்த முறை கோடைக்காலத்தில் வெப்பநிலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால் கோடைக்காலத்திற்கு முன்பாகவே அனேக இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பநிலை பதிவானது. இதனால் வெயிலை சற்று தணிக்கும் வகையில், கோடை மழை பெய்யாதா? என்று மக்கள் எதிர்பார்த்து இருந்தனர். இதன்படியே தற்போது தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்துள்ளது.

அந்தவகையில், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும், தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. நேற்று இரவு முதல் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் இன்று காலை 10 மணிவரை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Readmore: தேர்தல் பத்திரம்..!! எந்த கட்சிக்கு யாரெல்லாம் நன்கொடை..!! இனி ஈசியா பார்க்கலாம்..!!

Tags :
Advertisement