For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மக்களே அலர்ட்!. வலுப்பெறுகிறது காற்றழுத்தம்!. 5 நாட்களுக்கு வெளுத்து வாங்கும் மழை!

The low pressure area formed in the Bay of Bengal may strengthen into a low pressure zone today.
08:17 AM Sep 08, 2024 IST | Kokila
மக்களே அலர்ட்   வலுப்பெறுகிறது காற்றழுத்தம்   5 நாட்களுக்கு வெளுத்து வாங்கும் மழை
Advertisement

Rain: 'வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவலுப்பெறலாம்.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 13ம் தேதி வரை மழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளது.

Advertisement

மத்திய மற்றும் அதை ஒட்டியுள்ள வடக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய, காற்றழுத்த தாழ்வு பகுதியானது, நேற்று வடக்கு திசையில் நகர்ந்து, வடமேற்கு மற்றும் அதை ஒட்டியுள்ள மத்திய வங்கக்கடல் பகுதியில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது.இது, வடக்கு திசையில் நகர்ந்து, வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அடுத்த மூன்று நாட்களில் மேற்கு, வடமேற்கு திசையில், மேற்கு வங்கம் - வடக்கு ஒடிசா மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.

தமிழகத்தில் இன்று முதல் 13ம் தேதி வரை, ஓரிரு இடங்களிலும்,புதுச்சேரி, காரைக்கால்பகுதிகளிலும், இடிமின்னலுடன் மழைபெய்யலாம். சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு, வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய லேசான மற்றும்மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக, சென்னை மணலியில் 4 செ.மீ., மழை பெய்துள்ளது.

Readmore: கார்கில் போரில் பாகிஸ்தான் ராணுவம்!. 25 ஆண்டுக்கு பின் உண்மையை உடைத்த தளபதி!

Tags :
Advertisement