உஷார்!… இந்தியாவில் 22 மருந்துகள் தரமற்றவை!… மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அதிர்ச்சி!
Substandard Drugs: கடந்த ஏப்ரல் மாதத்தில் நாடுமுழுவதும் சந்தையில் விற்பனை செய்யப்பட்ட மருந்துகளில் 22 மருந்துகள் தரமற்றவை என்று மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்துகளையும், மத்திய, மாநில மருந்து தர கட்டுப்பாட்டு வாரியங்கள் மாதந்தோறும் ஆய்வு செய்கின்றன. அதேபோன்று போலி மருந்துகள் கண்டறியப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த மாதத்தில் சந்தையில் உள்ள மருந்துகளின் மாதிரிகளை, மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்தது. இதில், காய்ச்சல், ஜீரண மண்டல பாதிப்பு, கிருமி தொற்று உள்ளிட்ட 17 மருந்துகள், தரமற்றவையாக இருந்தன.
அதேபோல், உயர் ரத்த அழுத்தம், பாக்டீரியா தொற்றுக்கு பயன்படுத்தப்படும் ஐந்து மருந்துகள், போலியானவையாக இருந்தது கண்டறியப்பட்டது. அதன்படி தரமற்ற மற்றும் போலி மருந்துகளின் விபரங்கள், https://cdsco.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, மருந்து தர கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Readmore: கார்பனேற்றப்பட்ட செயற்கை பானங்களுக்கு மாற்று!… ஐசிஎம்ஆரின் வழிகாட்டுதல்கள் இதோ!