For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மதுப்பிரியர்களே..!! ஒருவர் எத்தனை மதுபாட்டில்கள் வரை எடுத்துச் செல்லலாம் தெரியுமா..?

08:43 AM Apr 16, 2024 IST | Chella
மதுப்பிரியர்களே     ஒருவர் எத்தனை மதுபாட்டில்கள் வரை எடுத்துச் செல்லலாம் தெரியுமா
Advertisement

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. பல விஷயங்களுக்கு கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

Advertisement

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சியினர், தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், வாக்காளர்களுக்கு வாக்குறுதிகளை அள்ளி தெளித்து வருகின்றனர். இதற்கிடையே, தேர்தல் நடத்தை விதிகளின் போது, தலைவர்கள் முதல் மற்றவர்கள் வரை அனைவரும் பின்பற்ற வேண்டிய சில விதிகள் உள்ளன.

இந்த காலகட்டத்தில், அனைத்து மாநிலங்களிலும் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஏனென்றால், தேர்தல் நேரத்தில் அதிக அளவில் பணமும் மதுவும் சப்ளை செய்யப்படுகிறது. பணம், மதுபானம் தொடர்பாக கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் ரூ.50.000-க்கும் மேல் பணம் எடுத்துச் செல்லும்போது, அதற்கான ரசீது இல்லை என்றால், போலீசார் அதை பறிமுதல் செய்துவிடுவார்கள்.

எந்த மாநிலத்திலும் இரண்டு முதல் மூன்று மது பாட்டில்கள் வரை எடுத்துச் செல்லலாம் என்பது போல, மதுபானம் தொடர்பான விதிகள் மாநில அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டவையே. சில மாநிலங்களில் சீல் செய்யப்பட்ட மது பாட்டில் அனுமதிக்கப்படுகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு வேறு மாநிலத்தில் இருந்து ஒரே ஒரு சீல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை மட்டுமே கொண்டு வர முடியும். இதற்கு மேல் கொண்டு வந்தால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படுகிறது.

Read More : அடிக்கிற வெயிலுக்கு ஐஸ் வாட்டர் குடிக்க தோணுதா..? இதில் எவ்வளவு ஆபத்து இருக்குன்னு தெரியுமா..?

Advertisement