ஃபார்முலா 4 கார் பந்தயப் பாதையில் மது விளம்பரம்..!! நீங்களே இப்படி செய்யலாமா..? சீறிய அன்புமணி ராமதாஸ்..!!
ஃபார்முலா 4 கார் பந்தயப் பாதையில் வைக்கப்பட்டுள்ள மறைமுக மது விளம்பரங்களை உடனடியாக அகற்ற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் நடைபெறும் ஃபார்முலா 4 கார் பந்தயப் பாதையான தீவுத்திடலை சுற்றியுள்ள பகுதிகளில் கிங்பிஷர் எனப்படும் மதுவகையின் விளம்பரங்கள் மிக அதிகளவில் வைக்கப்பட்டுள்ளன. இத்தகைய விளம்பரங்கள் பார்வையாளர்களின் மனதில் மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். மது வகைகளுக்கு செய்யப்படும் விளம்பரமும், அதை கார்பந்தயத்தை நடத்தும் அமைப்பும், தமிழ்நாடு0 அரசும் அனுமதித்திருப்பதும் கண்டிக்கத்தக்கது.
மதுபானங்கள், புகையிலைப் பொருட்களின் விளம்பரங்களை நேரடியாக செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் மது மற்றும் புகையிலை நிறுவனங்கள் மறைமுகமாக விளம்பரங்களைத் திணிக்கின்றன. ஒரு மதுபானம் என்ன பெயரில் விற்பனை செய்யப்படுகிறதோ அதே பெயரில் குடிநீர், சோடா, சர்க்கரை ஆகிய பொருட்களை சந்தையில் அறிமுகம் செய்து அவற்றின் பெயரில் மது விளம்பரங்களை செய்கின்றன.
மது விளம்பரங்களுக்கு எதிராக கட்டுப்பாடுகள் இருக்கும் நிலையில், இவை அனைத்தையும் புறக்கணித்து விட்டு, ஒரு விளையாட்டுப் போட்டியில் விளம்பரங்கள் செய்யப்படுவதையும், அதை தடுக்க வேண்டிய தமிழ்நாடு அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதையும் அனுமதிக்க முடியாது. எனவே, பொது நலன் கருதியும், மக்களைக் காக்கும் கடமையை நிறைவேற்றும் வகையிலும் ஃபார்முலா 4 கார் பந்தயப் பாதையில் வைக்கப்பட்டுள்ள மறைமுக மது விளம்பரங்களை உடனடியாக அகற்ற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
Read More : பாலியல் தொல்லை..!! நடிகை சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பதிவால் வெடித்த பூகம்பம்..!!