’அக்ஷயா ஒரு நோயாளி’.. ’தினமும் ரத்தம் எடுத்து டயாலிசிஸ் பண்ணுவாங்க’..!! கானா பாலா அதிர்ச்சி பேட்டி..!!
பிக்பாஸ் வீட்டில் இருந்து சமீபத்தில் கடந்த வாரம் வெளியேறிய கானா பாலா, முதன் முதலாக பேட்டியளித்துள்ளார். அவர் கூறுகையில், ”நான் இன்னும் கொஞ்சம் கற்றுக் கொண்டு உள்ளே சென்றிருக்க வேண்டும். 2 வாரத்தில் விவாதம், 3-வது வாரத்தில் சண்டை, 4-வது வாரம் இருந்திருந்தால் நான் விளையாடியிருப்பேன். ஆனால், அதற்கு முன் எவிக்ட் ஆகிவிட்டேன். காலை டிபனுக்கு, மதியம் லன்ச்க்கு, நைட் டின்னருக்கு ஒரு கன்டண்ட் கொடுக்கிறது தான் விசித்ரா வேலை.
விசித்ரா, மாயா, பூர்ணிமா எல்லாரும் ஒன்னா இருந்தவங்க தான். பெரிய பூகம்பம் நடந்தாலும், எப்படி பேச முடியும்..? அப்புறம் எப்படி அதில் உண்மையான கோபம் இருக்கும்..? இது தான் என்னால் இந்த விளையாட்டை உணர முடியாமல் போக காரணம். தினேஷ், மாயா, விஷ்ணு ஆகியோர் போட்டியில் கடுமையாக இருப்பார்கள். பூர்ணிமா நன்றாக தான் விளையாடுகிறார். ஆனால், நடந்த பிரச்சனையை திரும்ப பேசுவது தான் எரிச்சலாக வருகிறது. 6 பேரை நம்பி தான் இந்த வாழ்க்கை போகுது என்று அக்ஷயா இருக்கிறார்.
இருந்து எதுக்கு நரக வேதனை? அவங்க ஒரு நோயாளி, தினமும் ரத்தம் எடுத்து, டயாலிசிஸ் பண்ணிட்டு பாவம் உயிரே போகுது. கருணை கொலை பண்ணிடுங்கிற நிலைமை. அந்த நிலைமையில எதுக்கு விளையாடனும்? பாவம் அவங்க போகட்டும்” என்று கூறியுள்ளார்.