For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஹாலிவுட் படத்தின் காப்பியா ‘விடாமுயற்சி’? லீக் ஆன படத்தின் கதை!

01:41 PM Apr 05, 2024 IST | Mari Thangam
ஹாலிவுட் படத்தின் காப்பியா ‘விடாமுயற்சி’  லீக் ஆன படத்தின் கதை
Advertisement

விடாமுயற்சியின் பட கதை பிரபல ஹாலிவுட் படமான ‘பிரேக்டவுன்’ படத்தின் காப்பி என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement

லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா, அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரா மற்றும் ஆரவ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த படத்திற்காக அஜித் உயிரை பணயம் வைத்த வீடியோ இணையத்தில் வைரலானது. அஜித்தின் இந்த ரிஸ்க்கை ரசிகர்களும் பாராட்டினர்.

அதேசமயம், இந்தக் காட்சி ’பிரேக்டவுன்’ என்ற பிரபல ஹாலிவுட் படத்தின் காப்பி எனவும் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். ’பிரேக்டவுன்’ படத்தின் இந்தக் காட்சியில் ஹீரோ, காணாமல் போன தனது மனைவி குறித்து வில்லனிடம் விசாரிப்பார். முதலில் வில்லன் ஹீரோவை கட்டிவைத்து சித்திரவதை செய்வார். பின்பு, ஹீரோ வில்லனை காரில் கட்டிவைத்து கிளம்புவார். அப்போதுதான் இந்த விபத்துக் காட்சி நடக்கும்.

அதேபோன்று தான் தற்போது வெளியாகியுள்ள இந்த ‘விடாமுயற்சி’ படக்காட்சியிலும் இருக்கிறது. இதை ஒப்பிட்டுப் பார்த்துவிட்டு, “அப்படியானால் ‘பிரேக்டவுன்’ படத்தின் ரீமேக்தான் ‘விடாமுயற்சி’யா?” என விடாமல் கேள்வி எழுப்பி வருகின்றனர் நெட்டிசன்கள். வலிமை படத்தின் கிளைமேக்ஸ் காட்சி ஜாக்கி சான் நடிப்பில் வெளியான போலீஸ் ஸ்டோரி படத்தில் இருந்து ரீ-மேக் செய்தது குறிப்பிடதக்கது.

Tags :
Advertisement